காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியையொட்டி அமைந்துள்ளது மஹான் பேர் மஹ்மூத் மஜ்தூப் வலிய்யுல்லாஹ் தர்கா. மஹான் அவர்களின் 314ஆம் ஆண்டு கந்தூரி நிகழ்ச்சிகள், இம்மாதம் 22ஆம் நாள் வியாழக்கிழமையன்று நடைபெற்றன.
கந்தூரியை முன்னிட்டு, ரபீஉல் அவ்வல் பிறை 01 முதல் 13 வரை ஒவ்வொரு நாளும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பிறை 01 முதல் 14 வரை இஷா தொழுகைக்குப் பின் மார்க்க அறிஞர்களால், பின்வரும் நிகழ்முறைப்படி உரை நிகழ்த்தப்பட்டது:-
கந்தூரி நாளான 22.11.2018. வியாழக்கிழமையன்று அன்று மாலையில் மஹான் அவர்களின் புகழ் பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் திக்ர் மஜ்லிஸும், இஷாவுக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவும் நடைபெற்றது. காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி & ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ சொற்பொழிவாற்றினார்.
இன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் தபர்ருக் எனும் நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, கந்தூரி கமிட்டி தலைவர் எச்.எம்.ஜக்கரிய்யா மவ்லானா, செயலாளர் எஸ்.எச்.தைக்கா தம்பி, பொருளாளர் டீ.எம்.கே.முஹம்மத் ஹஸன், துணைச் செயலாளர்களான எம்.கே.என்.அப்துர்ரஹ்மான், டீ.எம்.கே.மவ்லானா, எஸ்.எம்.எல்.தைக்கா தம்பி, பீ.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.ஓ.பிலால் அமீன், கே.எம்.டீ.அபூபக்ர் ஸித்தீக் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
|