ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை 23.11.2018. அன்று நடத்திட, அதன் முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த முழு விபரங்களை உள்ளடக்கியும், அபூதபீ – அல்அய்ன் – மேற்கு மாகாண காயலர்களுக்கு அழைப்பு விடுத்தும் அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, நமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 13-வது பொதுக்குழு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அபூதபீ, அல்அய்ன், மேற்கு மாகாண(Abudhabi, Al Ain & Western Region) வாழ் காயல் சகோதர, சகோதரிகள் அனைவரும் இச்செய்தியினை அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு தங்கள் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பித்து, தங்களின் உயர்ந்த ஆலோசனைகளையும் நமது காயல் மாநகரின் முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல பல கருத்துக்களையும் தர அன்புடன் அழைக்கின்றோம்.
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
இடம்: CAPITAL GARDEN (PARK)– Khalifa St. / Muroor St. Junction-Opp.old NBAD HQ-Abudhabi
கூட்ட நிகழ்முறை விபரங்கள்:-
காலை 10 : 00 மணி முதல் 12:00 மணி வரை இலவச பல் மற்றும் பொது மருத்துவ முகாமை நம் அபூதபீ காயல் நல மன்றமும் NMC மருத்துவமனையும் இணைந்து நடத்த நாடியுள்ளோம். உங்களின் பல் மருத்துவ சம்பந்தமான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருவதுடன் தகுந்த ஆலோசனைகளையும் வழங்க இசைந்துள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாமல் தாங்கள் அனைவர்களும் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்
ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுக்குழு கூட்டமும் அதனைத்தொடர்ந்து மதிய உணவிற்குப்பின் வழமைபோல் சிறுவர் சிறுமியர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு மாலை 5மணிக்குள் பொதுக்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் நிறைவுபெறும்.
அழைப்பில் அன்புடன்
நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்
அபூதபீ கா.ந.மன்றம் -ஐக்கிய அரபு அமீரகம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)
|