சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா – SDPI கட்சியின் சார்பில், காயல்பட்டினத்தில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
SDPI கட்சியில் இணைந்திடுவோம்... மக்கள் அரசியலை வலிமைப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடும் மற்றும் சுகாதாரத்தை வலியுறுத்தியும் மகாத்மா காந்தி நினைவு நுழைவு வாயிலிலிருந்து இரு சக்கர வாகனப்பேரணி துவங்கியது.
முன்னதாக பேரணியை சமூக ஆர்வலர் கலாமி ஹாஜி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைக்க SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் காதர் முஹைதீன் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் உஸ்மான் முன்னிலை வகித்தார்கள். கட்சியின் மாவட்ட செயலாளர் மைதீன் கனி, திருச்செந்தூர்தொகுதி தலைவர் முஹம்மது உமர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
பேரணி தைக்காத் தெரு, காட்டுத் தைக்காத் தெரு, சதுக்கைத்தெரு, நெய்னார் தெரு, கீழ சித்தன் தெரு, தீவுத்தெரு, முத்துவாப்பாதைக்காத் தெரு, சொளுக்கார் தெரு , ரெட் ஸ்டார், தாயிம் பள்ளி,மற்றும் பெரிய நெசவுத் தெரு வழி்யாக சீதக்காதி திடல் வந்து நிறைவடைந்தது.
பேரணியில் டெங்கு மற்றும் சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரம் SDPI கட்சியினரால் விநியோகம் செய்யப்பட்டது
பேரணியில் 85க்கும் மேற்பட்ட இரு சக்கரவாகனங்களில் சுமார் 130க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் சீதக்காதி திடலில் வைத்து 50 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை SDPI கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்.*
இந்நிகழ்ச்சியினை கட்சி செயல்வீரர் மற்றும் பேச்சாளர் அப்துர் ரஹ்மான் தொகுத்து வழங்கி, இறுதியாக நன்றியுரையும் ஆற்றினார். பேரணியின் வாயிலாக தீர்மானங்களை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1) டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) தமிழக அரசு சொத்து வரி உயர்வை கண்மூடித்தனமாக உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.
3) காயல்பட்டினத்தில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும், விரைவாக புதுப்பிக்க வேண்டும். மேலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டும், மேலும் அனைத்து அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும்.
4) காயல்பட்டினம் இரயில்வே பிளாட்பார்ம் பயணிகள் ஏற, இறங்க ஏதுவாக, பிளாட்பார்ம் உயர்த்தப்பட வேண்டும்
5) காயல்பட்டினம் நகராட்சிக்கு உடனடியாக நிரந்தர ஆணையரை நியமனம் செய்யப்பட வேண்டும்
என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
6) மக்களுக்கு கேடு நாசகார DCW ஆலையை அரசு இழுத்து மூட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|