காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திலுள்ள பயணியர் காத்திருப்பறை மழையில் ஒழுகும் நிலையிலுள்ளமை, நிலையத் தொலைபேசி இயங்காமை ஆகியன குறித்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும முறையீடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, ரயில்வே உயரதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பயணியர் காத்திருக்கும் அறை - மழையில் ஒழுகுகிறது.
மேலும் - காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் தொலைபேசி எண் (04639 280 202) நீண்ட நாட்களாக இயங்காமல் உள்ளது.
இது குறித்து - நடப்பது என்ன? குழுமம் (@nadappathuenna), இந்திய ரயில்வே துறையின் ட்விட்டர் தொடர்பு முகவரி மூலம், அமைச்சகம் (@RailMinIndia), அமைச்சர் (@PiyushGoyalOffc) மற்றும் கோட்ட மேலாளர் (@drmmadurai) ஆகியோரிடம் புகார் பதிவு செய்தது.
இந்த புகார்களை தொடர்ந்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தென்னக ரயில்வே அமைப்பின் மதுரை கோட்ட மேலாளர் (DRM) உத்தரவிட்டுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 25, 2018; 9:30 am]
[#NEPR/2018112501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|