| 
 காயல்பட்டினம் நகராட்சியிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு உடனடியாகப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத் துறை உயரதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  
இதுகுறித்த செய்தியறிக்கை:-
  
 காயல்பட்டினம் நகராட்சியின் பல்வேறு பொறுப்புகள் பல மாதங்களாக காலியாக உள்ளன.
  
அந்த காலியிடங்களை - நேர்மையான, திறமையான பணியாளர்கள் கொண்டு நிரப்பிட - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலர் திரு ஹர்மந்தர் சிங் IAS, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜீ.பிரகாஷ் IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல இயக்குனர் திரு ராஜன் ஆகியோருக்கு மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  
===================================== 
காலியிடங்கள் (நகராட்சி இணையதளம் மற்றும் அதிகாரிகள் தகவல்படி)  
=====================================
  
## ஆணையர் (COMMISSIONER)
  
## மேலாளர் (MANAGER)
  
## வருவாய் ஆய்வாளர் (REVENUE INSPECTOR)
  
## இளநிலை உதவியாளர் (JUNIOR ASSISTANT)
  
## நகர திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR)
  
## தரவு உள்ளீட்டாளர் (DATA ENTRY OPERATOR)
  
## காவலாளி (WATCHMAN)
  
 
  
இவண்,  
நிர்வாகிகள்,  
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.  
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
  
[பதிவு: நவம்பர் 27, 2018; 8:00 am]  
[#NEPR/2018112701]
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  |