ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி 07.12.2018. அன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க – உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 07.12.2017 அன்று, துபை ஸஃபா பூங்காவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க, அமீரகம் வாழ் அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் 7 வெள்ளியன்று ஸஃபா பார்க்கில் (Safa Park) பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு துபை காயல் நல மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, வாகனங்கள், நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும் துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரீ விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் துபை ஸஃபா பார்க்கில் (Safa Park, Gate No. 2) காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் சிறார்களுக்கான கிராஅத் ஓதும் நிகழ்ச்சி, கலந்துரையாடல், அறிக்கைகள் சமர்ப்பித்தல், புதிய உறுப்பினர் அறிமுகம், சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியோர்களுக்கான வினாடி-வினா போட்டி, இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
வழமை போல் பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்கள் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பித்துத் தருமாறு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். அத்தோடு நமது நல மன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும், விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் நடத்தப்பட அதிகமான தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து சகோதரர் செய்யது இப்றாஹீம் என்ற போலீஸ் இப்றாஹீம் (அலைபேசி எண் 050-4535135/055-9940282) அவர்களைத் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை உற்சாகப்படுத்தும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10.30 மணிக்குள் வருவோருக்கும், ஜும்ஆவுக்கு முன் வருவோருக்கும், ஜும்ஆவுக்குப் பின் வருவோருக்கும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
அதே போன்று தன்னார்வத் தொண்டர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதீனா லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்குப் (பழைய லுலு சென்டர்) பின்புறம் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக 8.30 மணிக்கு முதல் வாகனமும், 9.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும். இது சம்பந்தமாக சகோதரர் முத்து முஹம்மது (058-2806474), சகோதரர் முத்து மொஹ்தூம் (055-8373586) ஆகியோரைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்
|