மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
மருத்துவம் சார்ந்த கல்விக்கு நீட் (NEET; NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் கல்வியாண்டிற்கான இத்தேர்வு, மே 5, 2019 அன்று நடைபெறவுள்ளது. இவ்வாண்டு முதல் - இத்தேர்வினை, NATIONAL TESTING AGENCY என்ற அமைப்பு நடத்தவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் - நவம்பர் 1 முதல், http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பெறப்பட்டு வருகிறது.
இறுதி தினம் - நவம்பர் 30 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 7 வரை விண்ணப்பம் செய்யலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:- ரூபாய் 1400
இணையதளம்:- http://ntaneet.nic.in
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 1, 2018; 9:00 am]
[#NEPR/2018120101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|