ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி விமரிசையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. காயலர்கள் அதில் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அபூதபீ கா.ந. மன்றத்தின் 13வது பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி கடந்த 23-11-2018 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5:30 மணி வரை CAPITAL GARDEN (CAPITAL PARK)-Abu Dhabi யில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.காலை 9.00 மணியில் இருந்தே உறுப்பினர்கள் வருகை தர அவர்களுக்கு நவதானிய சுண்டல் மற்றும் சுவைமிக்க தேநீர் வழங்கி உபசரிக்கப்பட்டது. வருகைதந்த உறுப்பினர்கள் அனைவரும் வருகை பதிவேட்டில் பதிவு செய்து தங்களின் சந்தாக்களை செலுத்தினர். பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பம்பர் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.
இலவச மருத்துவ முகாம்:
டாக்டர் செய்யது அஹ்மத் மற்றும் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் அவர்களின் ஒருங்கிணைப்பில் NMC-HOSPITAL மருத்துவ குழுமத்தின் ரோஹன் கென்னடி,ஹாரூன் துணையுடன் இலவச பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுக்குழுவில் கலந்து கொண்ட அநேகமானோர் பயன்பெற்றனர்.
பொதுக்குழு கூட்டம்:
ஜும்ஆவுடையே நேரம் நெருங்கியதும் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்குச்சென்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் மன்ற 13-வது பொதுக்குழுக்கூட்டம் பிற்பகல் 1.15 மணிக்குத் மன்றத்தலைவர் ஜனாப் எம். எம் .மக்பூல் அஹ்மத் அவர்கள் தலைமையில் துவங்கியது.இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்ழரீ அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். அல் ஹாஃபிழ் முஹம்மது ஷபீக் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்பு மற்றும் மன்றத்தலைவர் உரை:
வந்தோர் அனைவரையும் மன்றத்தலைவர் எம். எம் .மக்பூல் அஹ்மத் அவர்கள் அகமகிழ்வோடு வரவேற்று மன்றத்தின் செயல்பாடுகளைப்பற்றி விளக்கம் அளித்தார். மன்றத்தின் முக்கிய செயல்திட்டங்களான மருத்துவம், கல்வி , இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை, ஏழை எளிய மாணவ / மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி , புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம், ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மற்றும் ஊரில் நடத்தப்பட்ட முதலுதவி முகாம் பற்றிய செய்திகளை பற்றிய விளக்கம் அளித்ததுடன் மன்றச் செயல்பாடுகளில் மன்றத்தின் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் தாராள அனுசரணை செய்த அனைவருக்கும் தனது பாராட்டினை தெரிவித்து கொண்டார் இன்னும் மன்றத்தின் சேவைகள் நலத் திட்டங்கள் மேன்மை பெற சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்த வேண்டி உறுப்பினர்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள் ஆண்டறிக்கை:
மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், ஆண்டறிக்கையும் ,மன்றத்தின் செயல்பாடுகளையும் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மன்ற செயலாளர் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் அவர்கள் விரிவாக விளக்கினார்.
மன்றத்தின் சார்பாக பல திட்டங்களுக்கு வழங்கிய தொகைகளை குறிப்பாக 1)புனித ரமழான் மாதத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் 2)ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள்,குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் 3) இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை 4)ஏழை எளிய மாணவ / மாணவிகளுக்குக்கான சீருடை வழங்கிட பொருளுதவி 5) ஷிஃபா அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகளோடு ஷிஃபா நிர்வாக வகைக்கு கொடுக்கப்பட்ட தொகை 6)இக்ரா நிர்வாக வகை மற்றும் ஐந்து பேருக்கு கல்வி உதவி 7) சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளநிவாரணத்திற்கு அனுப்பியத்தொகை 8)முதலுதவி விழிப்புணர்வு முகாம் மற்றும் முதலுதவி மருத்துவ கையேடு வெளியீடு 9) மைக்ரோ காயல் மற்றும் KMT மருத்துவமனையோடு இணைந்து மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி போன்ற அனைத்து திட்டங்களுக்கு மன்றம் சார்பாகவும் மனமகிழ்வோடு மன்றத்தின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தந்த அனுசரணைகளால்தான் இந்த அளவுக்கான உதவிகளை இறையருளால் சிறப்பாக செய்யமுடிந்ததை குறிப்பிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் நிறைவான நன்றிகளை தெரிவித்து நிறைவுசெய்து அமர்ந்தார்.
உறுப்பினர்கள் அறிமுகம்:
புதியதாய் வேலைவாய்ப்புக்களைத்தேடி அபூதபீ வந்திருக்கும் சகோதரர்கள் தங்களைப் பற்றிய சுயஅறிமுகம் செய்து தங்கள் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக மன்ற உறுப்பினர்களின் துறை சார்ந்தவரகளோடு நேர்முக ஆலோசனை செய்திடகமிட்டி அமைக்கப்பட்டது.
கருத்துரை:
மன்றத்தின் உறுப்பினர் ஆலிம் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ தமது கருத்துரையில் நம் மன்றத்தின் மூலம் அல்லாஹ்வின் அருளை பெறுவதற்க்காக நாம் சம்பாதிப்பதில், நமதூரில் உள்ள ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் பணிக்கு உதவிடுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதைச் சுட்டி காட்டினார்.மன்ற உறுப்பினர்களின் நகர்நலன் சார்ந்த பணிகள் சிறக்க இறைவனிடம் பிராத்திக்குமாறு வேண்டிக்கொண்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் தவாராது தங்களின் சந்தாக்களை உரிய நேரத்தில் செலுத்துவதின் மூலம் நலத் திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்த முடியும் மேலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த நாம் ஒற்றுமையாக செயல் படுவதை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
காயல் களரி சாப்பாடு:
மதிய உணவாகக் காயல் பாரம்பரியமிக்க சுவைமிகு களரி கறி, கத்தரிக்கா மாங்காய், புளியாணம் மற்றும் சுவீட் பரிமாறப்பட்டது இச்சுவைமிக்க களரி சாப்பாடு எம்மன்ற உணவு கமிட்டியினர் துபாய் காயல் சமையல் குழும வல்லுநர்கள் மூலம் சிறப்பாய் தயார் செய்திருந்தனர். மேலும் மாலை சமூசாவுடன் தேநீர் அனுசரணை வழங்கிய (BEST CHOICE RASTAURANT) நிறுவனர் ஆகியோர்களுக்கு பிரத்தியேகமாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பெண்கள்/சிறுமியருக்கான போட்டி:
பெண்கள் மற்றும் சிறுமியர்க்கான விளையாட்டுப் போட்டிகள் பிரத்தியேகமாக நடந்தேறியது. இந்தப் போட்டிகளை அதற்கான பெண் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடந்தேறியது..
சிறுவர்/பெரியவர் போட்டிகள்:
சிறுவர்களுக்கு Lemon & Spoon, Running race, Balloon Fighting,, ஆகிய போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. பூங்காவில் சிறுவர்/பெரியவர்களின் Sack Race ஆரவாரத்துடன் ஆரம்பமானது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கப்பட்ட விளையாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
வினாடி-வினா போட்டி:
அஸர் தொழுகைக்குப் பின் அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 9 நபர்கள் கொண்ட எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு நான்கு சுற்றுகளாக காயல் வினாடி வினா வல்லுநர் L.T.இப்ராஹிம் மற்றும் டாக்டர் H.M. ஹமீத் யாசிர் சிறப்பாகச் செய்திருந்தனர் விறுவிறுப்பாக நடந்தவினாடி-வினா போட்டியில் உறுப்பினர்கள் ஆவலுடன் கலந்துகொண்டனர். சிறுவர்/பெரியவர் கலந்து கொண்ட போட்டிகள் மற்றும் அவர்கள் பெற்ற பரிசுகளையும் புகைப்படத்தில் கண்டு ரசித்திடுக
பரிசளிப்பு விழா:
போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கான பரிசளிப்பு விழா தனியாக பெண்கள் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னிலை வகித்த மன்ற நிர்வாகிகள் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், துபை காயல் நல மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊரிலிருந்து கலந்துகொண்ட பெரியவர்கள் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.
நன்றியுரை:
இறுதியாக இந்த இனிய பொதுக்குழு கூட்டம் சீரிய முறையில் நடைபெற அருள்புரிந்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கும் மன்றத்தின் அழைப்பினைஏற்று வருகை தந்த அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,பொதுக் காரியங்களுக்காக அமீரகம் வந்து மன்றத்தின் பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள், ஊரிலிருந்து உறவுகளைக் காண வந்த சகோதர சகோதரிகளுக்கும், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்கள் தேநீர் மற்றும் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் உதவி செய்தவர்களுக்கும் உணவு தயார் செய்ய தம் வீட்டுத் தளவாடங்களை தந்துதவிய துபை காயல் நல மன்ற ஆலோசகர் தாவூத் காக்கா அவர்களுக்கும்,இலவச பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தி தந்த NMC-HOSPITAL மருத்துவ குழுமத்தினர்கள் மற்றும் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மக்கள் தொடர்பாளர் A.R. ரிஃபாய் அவர்கள் நன்றி தெரிவித்து பாராட்டுக்களுடன் நிறைவு செய்தார்.
துஆ
ஹாபிழ் முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி அவர்கள் துஆ ஓத, கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் https://photos.app.goo.gl/v493nsRqW7Nf9RzA7 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக்காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|