பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
2006-2011 காலகட்ட, ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றம் - தனது இறுதி கூட்டத்தை, செப்டம்பர் 13, 2011 அன்று நடத்தியது. புதிய நிர்வாகம் - தேர்தலை தொடர்ந்து, அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி - தன் பதவி காலத்தை துவங்கியது.
காயல்பட்டினம் நகராட்சியின் கஜானாவில் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - எவ்வளவு பணம் மீதி வைத்து சென்றார்?
இந்த கேள்விக்கான பதில் - 2010-2011 மற்றும் 2011-2012 நகராட்சி வங்கி கணக்குகளில் (BANK RECONCILIATION STATEMENT) உள்ளது.
இந்த காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி - வெவ்வேறு வகைக்காக, 13 வங்கி கணக்குகளை பராமரித்து வந்தது.
(a) அரசு கருவூல கணக்கு - 3 பராமரிக்கப்பட்டு வந்தது
இந்த வகை கணக்குகள் பொதுவாக, பொது நிதி தவிர - திட்ட நிதி, ஸ்வர்ண ஜெயந்தி திட்டநிதி, ஊழியர்கள் வருங்கால வாய்ப்பு நிதி போன்ற வகைகளுக்கு பயன்படுத்தப்படும்
-- Treasury I
-- Treasury II
-- Treasury III
(b) இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5 கணக்குகள்
இந்த வகை கணக்குகள் பொதுவாக, பொது நிதி தவிர - திட்ட நிதி, ஸ்வர்ண ஜெயந்தி திட்டநிதி, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (PF) போன்ற வகைகளுக்கு பயன்படுத்தப்படும்
-- 049101000015112
-- 049102000005052
-- 049101000020224 (Special Roads Project)
-- 049101000001788 (Anna Marumalarchi Scheme)
-- 049102000005053
(c) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 3 கணக்குகள்
இந்த வகை கணக்குகளில் மத்திய (CFC), மாநில (SFC) அரசுகளின் மானியங்கள், STAMP DUTY வகை பங்கு போன்றவை பெறப்படும்
-- 10852663985
-- 10852664253
-- xxxxxxxxx5820
(d) தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி 2 கணக்குகள்
-- 1125 (குடிநீர் விநியோகம்)
-- 1039 (பொது நிதி)
மார்ச் 31, 2011 முடிய 2010-2011 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சியின் 13 வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 2 கோடியே, 67 லட்சத்து, 49 ஆயிரத்து, 515 ரூபாய் (2,67,49,515)
இந்த தேதிக்கு பிறகும் - 7 மாதங்கள், 2006-2011 நிர்வாகம் தொடர்ந்ததால், தொடர்ந்த நிதியாண்டு இறுதியில் - வங்கியில் இருந்த பணம் விபரம் அவசியமாகிறது.
மார்ச் 31, 2012 முடிய 2011-2012 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சியின் 13 வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 5 கோடியே, 46 லட்சத்து, 17 ஆயிரத்து, 701 ரூபாய் (5,46,17,701)
எந்தெந்த வகைக்கான வங்கி கணக்கில், எவ்வளவு தொகை இருந்தது என்ற விபரங்களடங்கிய ஆவணங்கள்:-
இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவெனில், அந்தந்த வகைக்கான நிதியை, அந்த நிதி வகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு மட்டுமே செலவு செய்யமுடியும். உதாரணமாக - மத்திய, மாநில அரசு மானியங்கள் (CFC; SFC), எந்த வகை பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற அறிவுரையுடன் தான் அனுப்பப்படும்
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 4, 2018; 5:30 pm]
[#NEPR/2018120401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
|