பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள்படி, 2013-2014 நிதியாண்டில் மட்டும், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவிற்கு புதிதாக வந்த தொகை (RECEIPTS) - 14 கோடியே, 19 லட்சத்து, 12 ஆயிரத்து, 831 ரூபாய் (14,19,12,831).
அந்த நிதியாண்டில் (2013-2014), காயல்பட்டினம் நகராட்சி செலவு செய்த தொகை (PAYMENTS) - 14 கோடியே, 85 லட்சத்து, 26 ஆயிரத்து, 575 ரூபாய் (14,85,26,575) ஆகும்.
அதாவது, அவ்வாண்டு புதிதாக வந்த தொகையை விட, குறைந்தது - 66 லட்சம் ரூபாய் கூடுதலாக தான் - காயல்பட்டினம் நகராட்சியால் செலவு செய்யப்பட்டது.
அந்நிதியாண்டு (2013-2014) இறுதியில், காயல்பட்டினம் நகராட்சியின் 16 வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 14 கோடியே, 43 லட்சத்து, 86 ஆயிரத்து, 601 ரூபாய் (14,43,86,601).
நாம் ஏற்கனவே முந்தைய பாகத்தில் கண்டது போல், நகராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த IUDM மற்றும் UIDSSMT (புதிய குடிநீர் திட்டம்) வகை நிதியும் இதில் அடங்கும்.
வங்கி வாரியான முழு விபரங்கள்:-
2014-2015 நிதியாண்டில் மட்டும், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவிற்கு புதிதாக வந்த தொகை (RECEIPTS) - 9 கோடியே, 93 லட்சத்து, 80 ஆயிரத்து, 84 ரூபாய் (9,93,80,084).
அந்த நிதியாண்டில் (2014-2015), காயல்பட்டினம் நகராட்சி செலவு செய்த தொகை (PAYMENTS) - 10 கோடியே, 73 லட்சத்து, 16 ஆயிரத்து, 690 ரூபாய் (10,73,16,690) ஆகும்.
அதாவது, அவ்வாண்டு புதிதாக வந்த தொகையை விட, குறைந்தது - 80 லட்சம் ரூபாய் கூடுதலாக தான் - காயல்பட்டினம் நகராட்சியால் செலவு செய்யப்பட்டது.
அந்நிதியாண்டு (2014-2015) இறுதியில், காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குகளில் இருந்த தொகை - 13 கோடியே, 65 லட்சத்து, 83 ஆயிரத்து, 283 ரூபாய் (13,65,83,283). [பணம் ஆக்கப்படாத 1,62,85,127 ரூபாய் மதிப்பிலான காசோலை (UNCASHED CHEQUE) தொகை சேர்க்காமல்]
நாம் ஏற்கனவே முந்தைய பாகத்தில் கண்டது போல், நகராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த IUDM மற்றும் UIDSSMT (புதிய குடிநீர் திட்டம்) வகை நிதியும் இதில் அடங்கும்.
வங்கி வாரியான முழு விபரங்கள்:-
2014-2015 நிதியாண்டில், காயல்பட்டினம் நகராட்சி கூடுதலாக ஐந்து வங்கி கணுக்குகளை துவக்கியது. அதில் 4 - சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் ஆகும். ஒன்று - ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (திருச்செந்தூர் கிளை) வங்கி கணக்காகும். இவைகளுடன் - காயல்பட்டினம் நகராட்சியின் வங்கி கணக்குகள் எண்ணிக்கை - 21.
அந்த புதிய வங்கி கணக்குகள் வருமாறு:
(1) சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
-- xxxxx17099 (RF)
-- xxxxx17431 (WS)
-- xxxxx12251 (LC)
-- xxxxx24239 (FIXED DEPOSIT)
(2) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (திருச்செந்தூர் கிளை)
-- xxxxx80567 (FIXED DEPOSIT)
இதில் ஒரு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கணக்கு [xxxxx24239] (50 லட்சம் ரூபாய்) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (திருச்செந்தூர் கிளை) கணக்கு [xxxxx80567] (1 கோடி ரூபாய்) - நிலையான வைப்பு (FIXED DEPOSIT) கணக்காகும்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 5, 2018; 2:00 pm]
[#NEPR/2018120502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
|