பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
ஆபிதா சேக் பதவி காலத்தில், நகரில் எந்த பணிகளும் நடக்கவில்லை; பணம் கஜானாவில் அப்படியே இருந்தது என்று பரப்புரை செய்த நகரின் ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் - அவர் விட்டு சென்ற தொகையாக வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு தொகையினை சொல்லி வந்தார்கள். இந்த தொகை, பேசுபவரை பொறுத்து - 15 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாய் வரை இருந்தது!
உண்மை என்ன?
நாம் முந்தைய பாகத்தில் கண்டது போல், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் பதவி காலம் நிறைவுற்ற நிதியாண்டில் (2011-2012), நகராட்சியின் வங்கி கணக்கில் இருந்த தொகை - 5 கோடியே, 46 லட்சத்து, 17 ஆயிரத்து, 701 ரூபாய் (5,46,17,701).
புதிய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் பொறுப்பேற்ற பிறகு வந்த முழு நிதியாண்டில் (2012-2013) இறுதியில், நகராட்சி வங்கி கணக்கில் இருந்த தொகை - 14 கோடியே, 87 லட்சத்து, 16 ஆயிரத்து, 177 ரூபாய் (14,87,16,177).
அதாவது - முந்தைய நிதியாண்டு இறுதி தொகையை விட, 9.41 கோடி ரூபாய் அதிகம். இந்த 9.41 கோடி ரூபாய், ஏறத்தாழ முழுவதும், நகராட்சி திறந்த மூன்று புதிய வங்கி கணக்குகளில் இருந்தது.
அந்த வங்கி கணக்குகள் வருமாறு:
(1) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
-- xxxxx24100 (IUDM) = 2,97,31,048
-- xxxxx25025 (SFC) = 503
-- xxxxx25002 (UIDSSMT) = 6,76,86,937
இந்த புதிய வங்கி கணக்குகள் - அரசு புதியதாக அறிவித்திருந்த INTEGRATED URBAN DEVELOPMENT MISSION (IUDM) திட்டம் பணிகளுக்காகவும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, URBAN INFRASTRUCTURE DEVELOPMENT SCHEME FOR SMALL AND MEDIUM TOWNS (UIDSSMT) நிதி மூலமான - பொன்னங்குறிச்சி புதிய குடிநீர் திட்டத்திற்கான - கணக்குகள் ஆகும்.
அப்போது - 2012-2013 நிதியாண்டில், நகராட்சி செலவு செய்த பணம் எவ்வளவு?
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் இந்த நிதியாண்டுக்கான (2012-2013), இந்த விபரம் வழங்கப்படவில்லை. இருப்பினும் - காயல்பட்டினம் நகராட்சியின் ஓர் ஆண்டின் குறைந்த பட்ச வருவாய் (உள்ளூர் வரிகள், மத்திய - மாநில அரசு மானியங்கள் போன்றவை மூலம்) - குறைந்தது 6 கோடி ரூபாய் என்ற அடிப்படையில், 2012-2013 நிதியாண்டில் குறைந்தது 6 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என கணிக்க முடிகிறது.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 5, 2018; 8:30 am]
[#NEPR/2018120501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
|