கூம்புக் குழாய்கள் பயன்பாட்டை நிறுத்த உத்தரவிட்டு, காயல்பட்டினம் நகரிலுள்ள பள்ளிவாசல்களுக்கு, ஆறுமுகநேரி காவல்துறையிலிருந்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்துடன் தொடர்புபடுத்தி சமூக விரோதிகள் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கை:-
கூம்பு குழாய் ஒலிபெருக்கிகள் குறித்து நகரின் பள்ளிவாசல்களுக்கு ஆறுமுகநேரி காவல்நிலையம் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது. அதில் - கூம்பு குழாய் ஒலிபெருக்கிகள் குறித்த காவல்துறை நடவடிக்கைக்கு ஒரு தனி நபர் தான் காரணம் என்றும், அந்த தனி நபரின் பெயரை குறிப்பிடும் போது, திட்டமிட்டே - நடப்பது என்ன? குழுமத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், "நடப்பது என்ன? குழுமத்தை சார்ந்த" என்றும் சேர்த்து செய்தி பரப்பப்பட்டுள்ளது.
அந்த தகவலில் குறிப்பிடப்படும் நபர் - நடப்பது என்ன? குழுமத்தின் நிர்வாகியோ, மெகா அமைப்பின் நிர்வாகியோ, உறுப்பினரோ அல்ல; அவர் செய்ததாக கூறப்படும் நடவடிக்கைக்கும் மெகா | நடப்பது என்ன? குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனவே - இது போன்ற, அடிப்படையற்ற, அவதூறான செய்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்ற திட்டமிட்டு அவதூறு பரப்பும் இழி செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டுக்கொள்ளும்படியும் - பொது மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 29, 2018; 8:30 pm]
[#NEPR/2018112901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|