பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராக திருமதி ஐ.ஆபிதா சேக் தேர்வு செய்யப்பட்டார்.
படம்: கோப்பு
ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும், எதிரணியில் இருக்க, சுயேட்சையாக நின்று, பதிவான வாக்குகளில் ஏறத்தாழ 60 சதவீதம் வாக்குகள் பெற்று வென்ற இவர், 5 ஆண்டுகளாக - பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
தனி மனித தாக்குதல்கள், மிரட்டல்கள், நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் என பல்வேறு சவால்களை சமாளித்து, ஊழலுக்கு எதிரான, வெளிப்படையான நிர்வாகத்தை ஐந்தாண்டுகள் வழங்கினார்.
ஐந்தாண்டுகளாக இவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை, தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் திரு சோ அய்யர் IAS (ஓய்வு), ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் உறுதி செய்தார்.
இவரின் செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக, அமெரிக்க அரசு - இவர் உட்பட ஆறு சிறுபான்மை சமுதாய சமூக ஆர்வலர்களை, தனது விருந்தினராக அமெரிக்காவிற்கு அழைத்து கௌரவித்தது.
திருமதி ஐ.ஆபிதா சேக் பதவி காலத்தில் - பல்வேறு பணிகள் நடந்தன; நிர்வாக சீர்கேடுகள் சரி செய்யப்பட்டன; இருப்பினும் - 2011 உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை கண்ட நகரின் ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் ஐந்து ஆண்டுகளில் (2011 - 2016) எந்த பணியும் நடைபெறவில்லை என்றும், ஊழலை தடுக்கிறேன் என்று கஜானாவில் பல கோடி ரூபாய் மீதி வைத்து விட்டு அவர் சென்றார் என்றும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில் உண்மை என்ன?
திருமதி ஐ.ஆபிதா சேக் காலத்தில் - எவ்வளவு பணம், மக்கள் பணிக்காக செலவு செய்யப்பட்டது?
அவரின் பதவி நிறைவு நேரத்தில், எவ்வளவு பணம் நகராட்சி கஜானாவில் இருந்தது?
இது சம்பந்தமான தகவல்களை - நடப்பது என்ன? குழுமம், தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் தற்போது பெற்றுள்ளது.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் பதவி காலத்தின் இறுதி ஆண்டுகள் முதல் பெறப்பட்டுள்ள தகவல்கள் - அடுத்த பாகத்தில், இறைவன் நாடினால், விரிவாக வழங்கப்படும்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 2, 2018; 10:30 am]
[#NEPR/2018120201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }
|