சவூதி அரேபியா- ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 114-வது செயற்குழு கூட்டம் கடந்த 05.10.2018 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு மக்காவில் சகோ. ஒய்.எம்.முஹம்மது சாலிஹ் இல்லத்தில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல ஏக வல்லோனின் மாபெரும் கிருபையால் சவூதி அரேபியா- ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 114-வது செயற்குழு கூட்டம் கடந்த 05.10.2018 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் புனித மக்கா நகரின் ருசைபாவில் சகோ. ஒய்.எம். முஹம்மது சாலிஹ் இடத்தில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ. குளம் எம்.ஏ. அஹ்மது முஹியதீன் தலைமை ஏற்று நடத்த சகோ. அல்ஹாபிழ் எஸ்.ஏ. அபுதாஹிர் இறைமறை ஓத சகோ. ஒய்.எம். முஹம்மது சாலிஹ் வருகை தந்த அனைவரையும் வரவேற்க காயல் தேனீர், வடையுடன் கூட்டம் இனிதே ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களைபயும் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும், உயர்கல்விக்காக வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் ஷிபா மருத்துவ அமைப்பின் மூலம் வரப்பட்ட மனுக்களுக்கு வழங்கிய மருத்துவ உதவிகளையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
இந்த சிறப்பான கூட்டத்தில் கடைசியாக வந்து கலந்து கொண்ட நமது மன்றத்தின் துணைத் தலைவர் மருத்துவர் ஜியாத் அபூபக்கர் அவர்கள் தனது பணியினை ஜித்தாவில் நிறைவு செய்து கொண்டு லண்டன் செல்ல இருக்கிறார்கள். எனவே இந்த மன்றத்தின் ஆக்கபூர்வமான பணிகளை செவ்வனே நிறைவு செய்து தந்த மருத்துவர் அவர்களுக்கு நாம் பிரிவு உபசாரம் செய்து, அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து நம் மன்றத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு மன்ற பணிகளை அவதானிப்பதுடன் இன்ஷா அல்லாஹ் அவர்கள் மீண்டும் இந்த புண்ணிய பூமிக்கு வரவும், அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழவும் நாம் எல்லோரும் துஆ செய்து கொள்வோமாக ஆமீன்.
ஹஜ் வேளை வந்ததால் மன்ற கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின் இன்று கூடும் சூழலில் மனுக்கள் நிறைய வந்திருப்பதை நினைவு படுத்தி, அத்தனைக்கும் நாம் நிதி வழங்க இருப்பதால், மன்ற உறுப்பினர்கள் தங்களது தாராள நிதி உதவியுடன், சந்தாக்களையும் துரிதமாக தந்து, நமது சேவைகளை தோய்வின்றி தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்குமாறு வேண்டிக்கொண்டு, நாம் எல்லோரும் நம் ஊரின் நன்மை கருதி இந்த இடத்தில் ஓன்று கூடியிருக்கிறோம், சிரமம் பாராது வந்து கலந்து கொண்ட உறுப்பினர் அனைவர்களையும் அன்போடு வரவேற்று எனது உரையை நிறைவு செய்கிறேன். என்று கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ.எம்.ஏ.செய்து இபுறாஹீம்.
நிதி நிலை:
சென்ற கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் தற்போதைய இருப்பு போன்ற விபரபட்டியலின் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மன்ற துணைத்தலைவரை கௌரவிப்பு:
இம்மன்றத்தின் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப் பட்டத்திலிருந்து, எங்களுக்கும், மன்றத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருந்து, மனதளவிலும், பொருளாதர வகையிலும் மிகவும் ஆக்கமும் ஊக்கமும் தந்த அருமை சகோ.மருத்துவர் முஹம்மது ஜியாது அவர்கள், தனது சொந்த காரணங்களுக்காக தனது பணியினை இந்த மண்ணில் நிறைவு செய்துவிட்டு, அவரது குடும்பத்தினர் வாழும் குடியுரிமை பெற்ற நாடான ஐக்கிய ராஜ்ஜியம் லண்டன் மாநகரம் ் புறப்பட இருப்பதால், அவரை வாழ்த்தி அவரின் நன் நாட்டங்கள் எல்லாம் நிறைவேறிட, நலமுடன் நல் வாழ்வு வாழ நாம் யாவரும் துஆ செய்வோமாக என்று கூறி, அவரின் அருமை பெருமைகளை கோடிட்டு காட்டி அந்த நல்ல உபகாரியத்திற்கெல்லாம் இந்த மன்றம் என்றும் நன்றி கடமைப்பட்டுள்ளது. என்ற நன்றி பெருக்குடன் தனது உரையை நிறைவு செய்து, மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் இங்கு பதியுமாறு வேண்டிக்கொண்டார். மன்றத்தின் தலைவர் சகோ.குளம். எம்.ஏ.அஹமது மெய்தீன்.
அதன்படி சகோ.சட்னி.எஸ்.ஏ.கே.செய்து மீரான் கூறுகையில் மருத்துவரின் அருமை பெருமைகளை சுருக்கமாக எடுத்து கூறி, மருத்துவரின் தந்தை ்.பொறியாளர் ஹாஜி ,முஹம்மது அபூபக்கர் அவர்களும் இந்த புண்ணிய பூமியில் பணி செய்தவர்கள்தான். அப்போதே நம் ஊர்மக்களுக்கு சேவைகள் செய்திட வேண்டும் என்ற நன்னோக்குடன் உலகில் முதன்முதலாக காயல் நலமன்றத்தை துவக்கியவர். அது போக அவர்கள் உம்ரா வரும் போதெல்லாம் இந்த மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு நிதி வழங்கி மன்ற வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். என்பதையும் எடுத்து காட்டி, அவர்கள் காலத்தில் மக்காவில் நடந்த சில சம்பவங்களையும் அழகாக எடுத்து வைத்து கூட்டத்தை கலகலப்பாக்கியதோடு, மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது நமக்கு கிடைத்த ஒரு அமுதசுரபி, பொருளாலும், மனதாலும் இந்த மன்ற வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்து செயல்பட்டவர். இன்று நம்மை விட்டு பிரிந்து சென்றாலும், இன்ஷா அல்லாஹ் மீண்டும் இந்த புண்ணிய பூமிக்கு திரும்ப வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஏனெனில் இப்புண்ணிய பூமியை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நேசிக்கின்றோமோ இது நம்மை முழுமையாக ஈர்ந்திழுக்கும் என்பதை தனது சுயவாழ்வில் உணர்ந்தவன் என்பதையும் எடுத்து கூறி அன்னாருக்கு துஆ செய்து தனதுரையை நிறைவு செய்தார்.
மருத்துவர் நமது எல்லா கூட்டங்களுக்கும் தவறாது வருகை தருபவர்கள் அதிலும் நேரம் தவறாமை சரியாக முன்வந்து நிற்பவர். மேலும் எப்போது கூட்டம் என்ற ஆர்வத்துடன் வினா தொடுப்பவர். அவர்போல் நாம் எல்லோரும் பயணிக்கவேண்டும், அவர்களின் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன். என்று கூறி அமர்ந்தார் சகோ. ஏ.எம்.செய்து அஹ்மது.
நான் முதன் முதலாக 1980 இல் சிறுவயதில் வாப்பாவுடன் இந்த புனித மக்காவிற்கு வந்தேன் அப்போ என் வாப்பா செய்த நற்சேவைகளை கவனித்து வந்தபோது எனக்கும் ஆர்வம் வந்தது. அதனால் தான் அப்போதிருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்றேன். நான் மட்டும் இல்லே என் பிள்ளைகளுக்கும் அதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த மண்ணைவிட்டு போக மனசு வரலே. அல்லாஹ் நாடினால் நான் மீண்டும் வருவேன் துஆ செய்யுங்கோ. உங்களோடு இருந்து நான் நல்ல தமிழும் கற்றுகிட்டேன். என்று ஊரில் இருந்த பொது நடந்த சில சம்பவங்களையும் எடுத்துக்கூறி, நம் எல்லோருக்கும் இந்த சேவை மனப்பான்மை தொடரவேண்டும் என கொஞ்சும் அழகு தமிழில் உரையாடி எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறி நிறைவு செய்தார் மருத்துவர் முஹம்மது ஜியாது அவர்கள்.
அதனை அடுத்து, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ.எஸ்.ஹெச்.அப்துல்காதர், தலைமையில் மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது அவர்களுக்கு நினைவு பரிசாக கேடயம் வழங்கி கௌரவித்தார்கள்.
அதனை தொடர்ந்து மன்ற செயலாளர் சகோ.எம்.ஏ.செய்து இபுறாஹீம் தனது கை வண்ணத்தில் சொந்தமாக தயாரித்த அழகு கேக் தனை சகோ.மருத்துவர் முஹம்மது ஜியாது அவர்கள் வெட்டி மன்ற உறுப்பினர்களுக்கு பரிமாறினார்கள்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் மருத்துவர் முஹம்மது ஜியாது முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. கர்ப்பப்பை கட்டி இருவர், இருதய அறுவை சிகிச்சை மூவர், புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை, குடல் இறக்கம் இருவர், கழுத்தில் கட்டி, சிறுநீரக கல், மஞ்சள் காமாலை, தைய்ராடு, கண் சிகிச்சை இருவர்,விபத்தில் காயம், சக்கரை நோய் கண்டு காலில் புண், காலில் இரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அறுவை சிகிச்சை, திடீரென நடக்க முடியாமல் போன சிறுமிக்கு அறுவை சிகிச்சை, வலிப்பு நோய் தொடர் சிகிச்சை, சிறு குழந்தைக்கு கால் வளைவு அறுவை சிகிச்சை, மற்றும் தொடர் சிகிச்சை மருத்துவம் போன்ற பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 22 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிட முடிவு செய்யப்பட்டு, அனைவரது பூரண சுகத்திற்கும் துஆ செய்யப்பட்டது.
கல்வி உதவித்தொகை:
B.Sc – Hotel Management, B.Sc, - Radiology, M.B.A, BDS, B.E ஆறுபேர்கள் என்று உயர் கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகைகள் பத்து பயனாளிகளுக்கு வழங்கி நிதி ஒதுக்கப்பட்டது.
சகோ. சீனா எஸ். ஹெச். மொக்தூம் முகம்மது நன்றி நவில சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆரோக்கியமான நல்ல பல கருத்துகள் பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
புனித மக்கா செயற்குழு உறுப்பினர்களின் அனுசரணையுடன கூட்ட ஆரம்பத்தில் காயலின் தேநீருடன் சாலா வடையும் வழங்கப்பட்டது. நிறைவில்் நாவிற்கு ருசியான மண மணக்கும் காயல் பிரியாணி, சம்பல், பச்சடி மற்றும் இனிப்புடன்
இரவு உணவு பரிமாறப்பட்டது. செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை புனித மக்கா செயற்குழு உறுப்பினர்கள் மிக சிறப்புடன் செய்து இருந்தார்கள்.
தீர்மானங்கள்:
1 - மருத்துவர் முஹம்மது ஜியாது அபூபக்கர் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்து, பிரிவு உபச்சாரம் செய்து வாழ்த்தி அன்னாரின் நல் வாழ்விற்கும் நீண்ட ஆயுளுக்கும் மன்ற உறுப்பினர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
2 - மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவித்தொகை கோரி வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மொத்தம் 32 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
3 - மன்றத்தின் 115 ஆவது செயற்குழு கூட்டம் யான்பு வாழ் காயலர்கள் சங்கமம் நிகழ்வாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 09/11/2018 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நிறைவேற்றிய பின் கலவா சகோதர்களின் காயல் இல்லத்தில் வைத்து நடைபெறும்.
செய்தியாக்கம்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
செய்தியாக்கம்:
புகைப்படம்.
அரபி எம்.ஐ.முஹம்மது சுஐபு.
எம்.எஸ்.முஹம்மது நூஹ்.மக்கா.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
05.10.2018.
|