ஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவையின் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம், 14.10.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோவில் தெருவில் நடைபெற்றது.
மாநில தலைவர் வி.செல்வன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகச் செயலாளர் கல்லை எம்.சிந்தா, கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.எம்.கப்பார் அசன் வரவேற்றார்.
பொருளாளர் சின்னப்பன், ஸ்ரீவைகுண்டம் நகர தலைவர் சுடலைக்கண்ணு, காயல்பட்டினம் நகர செயலாளர் எம்.என்.எல்.காதர், அபூபக்கர் சித்தீக், மாவட்ட துணைத் தலைவர் நூருல் அமீன், எம்.இ.எல்.புகாரீ, ஷேக் நூர்தீன், எஸ்.கே.ஒய்.பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னாள் பொறுப்பாளர்களான எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
மாநில துணை அமைப்புச் செயலாளர் என்.எஸ்.நெய்னா முஹம்மத் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
தகவல் & படங்கள்:
ஜாஃபர்
|