ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை 23.11.2018. அன்று நடத்திட, அதன் முந்தைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், அண்மைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 61 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 12-10-2018 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் L.T. இப்ராஹிம் அவர்களின் தலைமையில் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன்ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது. செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
மன்றத்தின் தீர்மானங்கள்:
• இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று நம் மன்றத்தின் 13-வது பொதுக்குழுவை CAPITAL PARK–Khalifa Street -Abudhabi வைத்து சிறப்பாக நடத்திட முடிவுசெய்யப்பட்டது.
• பொதுக்குழு கூட்டத்தை துவக்குவதற்கு முன்பாக அன்று காலை 10மணி முதல் ஜும்மா தொழுகைக்கு முன்புவரை (12மணி வரை) உறுப்பினர்களுக்கு DENTAL CAMP(பல் மருத்துவ ஆலோசனை )நடத்திடவும் முடிவுசெய்யப்பட்டது.
• அபூதபீ மற்றும் அதன் புறநகர் பகுதியில் புதியதாய் வந்துள்ள நம் காயல் சகோதரர்கள் தங்களது அலைபேசி எண்கள் மற்றும் வசிக்கும் விவரங்களை MHL ஷேக்(0555082785) மற்றும் அபூஹுரைரா(0561092766) ஆகிறோர்களை தொடர்புகொண்டு உறுப்பினர்களாக பதிவு செய்வதோடு எதிர்வரும் பொதுக்குழுவில் அவர்களை பங்கெடுக்க முயற்சிகள் செய்ய இக்கூட்டம் வேண்டிக்கொண்டது.
• நம் மன்ற சம்பந்தமான நிகழ்வுகள் ,செய்திகள் அனைத்தையும் நம் உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக ஒரு அப்ளிகேஷன்(APP) வடிவமைத்திட முடிவு செய்யப்பட்டு இதற்கான பொறுப்பாளர்களாக முஹம்மது ஹுசைன் ,அப்துர்ரஹ்மான் , மற்றும் ஜாபர் சுலைமான் ஆகியோர்ககள் நியமிக்கப்பட்டனர்.
• கடந்த ஆண்டுகளைப்போல் இவ்வாண்டும் இக்ரா கல்வி வகைக்கான தொகை Rs.35,000 மற்றும் நிர்வாக வகை Rs.20,000 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
• பொதுக்குழு அழைப்பிதழ் விரைவில் சுற்றறிக்கை செய்தியாக உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும்
இறுதியாக ஆலிம் இஷ்ஹாக் லெப்பை மஹ்ழரி அவர்கள் துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
PMSR ஷேக்னா
|