காயல்பட்டினத்தில் நேற்று 08.30 மணிக்குப் பெய்யத் துவங்கிய மழை 09.30 மணிக்கு நின்றது. பின்னர் மேகமூட்டமாக இருந்தபோதிலும், சில மணி நேரங்களில் வெயில் ஒளிர்ந்தது.
இவ்வாறிருக்க, 19.30 மணியளவில் மீண்டும் மழை பெய்யத் துவங்கி, சுமார் 30 நிமிடங்கள் இதமழை பொழிந்தது. இன்று நள்ளிரவில் சாரலும், தூறலும் மாறி மாறிப் பொழிந்தன.
இன்று 10.20 மணி நிலவரப் படி, வெயில் ஒளிர்கிறது. இதமான வானிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இன்று (05.10.2018. வெள்ளிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விடுமுறை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் நான்காவது அதிகபட்சமாக 22.20 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
|