Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:21:54 AM
செவ்வாய் | 12 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1930, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:56
மறைவு17:54மறைவு02:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:47
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20992
#KOTW20992
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 4, 2018
ஹாங்காங் பேரவை புதிய செயற்குழுவின் முதற்கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1740 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பிற்கு புதிய செயற்குழு 30.06.2018 அன்று நடைபெற்ற அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்புதிய செயற்குழுவின் முதல் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் பிரபு ஷுஅய்ப் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் புதிய செயற்குழுவின் முதலாவது கூட்டம் 28.09.2018 வெள்ளிக்கிழமையன்று, அமைப்பின் புதிய தலைவர் எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் இல்லத்தில் நடைபெற்றது.





வரவேற்புரை:

ஹாஃபிழ். ஏ.எல்.முஹம்மது இர்ஷாத் அலி கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். பேரவையின் புதிய செயற்குழுவின் அங்கத்தினரை வரவேற்றுப் பேசிய அவர், நகர் மற்றும் சமுதாய நலனுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:

அடுத்து, செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஐ.சவூத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் 30.06.2018 அன்று நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையையும் வாசித்தார்.

வரவு - செலவு கணக்கறிக்கை:

பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் எல்.ஏ.கே. புஹாரி சமர்ப்பித்தார்.

தீர்மானங்கள்:

அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

1. பேரவையின் ஆலோசனைக் குழுவினராக அனுபவமிக்க மூத்த உறுப்பினர்கள் ஐவர் தேர்வு செய்யப்பட்டனர்.

2. 2018-19 வருடத்திற்கான தமது உறுப்பினர் பதிவை (Membership) புதுப்பித்துக்கொள்ளாத உறுபினர்களை தொடர்பு கொண்டு அவர்களை அமைப்பின் உறுப்பினர்களாக விரைவில் புதுப்பிக்கச் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

3. மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா அமைப்பிற்கு வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ ரூபாய் 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.

4. நமதூர் மக்களுக்காக கல்வி பணியாற்றி வரும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கு வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இக்ராஃ கல்விச் சங்கத்தின் 2018-19 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக ரூபாய் 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

5. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 1.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

6. பேரவையின் தையல் தொழில் அமைப்பு KUF HONG KONG GARMENTS & TAILORINGயின் நிர்வாக செயற்பாடுகளை மேற்பார்வையிட துணைக்குழு அமைக்கப்பட்டது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் பிரபு ஷுஅய்ப் நன்றி கூற, ஹாஃபிழ். எம். எம். சுல்தான் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.



பங்கேற்ற அனைவருக்கும் கூட்டம் ஆரம்பிக்கும் முன் சுவையான சிற்றுண்டியும், கூட்டத்திற்குப் பின் இரவு உணவும் எஸ்.எம்.கே. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது. குழுப்படம் பதிவு செய்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.










இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved