தடை செய்யப்பட்டுள்ள நிலையான அளவு கலவை மருந்துகள் (Fixed Dose Combination - FDC Drugs) தொடர்பாக பொதுமக்கள் செய்ய வேண்டியதென்ன
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவ உலகில் - ஒரே ஒரு மூலப்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட மருந்துகளை SINGLE ACTIVE INGREDIENT மருந்து என்பார்கள்.
இரண்டு அல்லது அதற்கு மேலான மூலப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மருந்தினை FIXED DOSE COMBINATION (FDC) மருந்து என்பார்கள்.
ஆயிரக்கணக்கான FDC மருந்துகள் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 328 கூட்டு (FDC) மருந்துகளை - மத்திய அரசு சமீபத்தில் தடை செய்துள்ளது. அதன் விளைவாக, நாட்டில் உள்ள எந்த மருந்தகமும் இந்த மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.
இந்த FDC மருந்துகள் மூலம் பாதிப்புகள் உள்ளது அல்லது அவ்வாறு கூட்டாக விற்பனை செய்வதால் எந்த பலனும் மக்களுக்கு இல்லை என்பவை - இந்த தடைக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 328 கூட்டு (FDC) மருந்துகளும் - சந்தையில் வெவ்வேறு பெயரில் (BRAND NAME), பல நிறுவனங்கள் வாயிலாக விற்பனையில் இருந்தன. ஒரு ஆவணப்படி - இந்த 328 வகையான FDC மருந்துகளும், 3000 க்கும் மேற்பட்ட பெயரில் (BRAND NAME) சந்தையில் விற்பனையில் உள்ளது.
இந்த செய்தியுடன் - 328 வகையான கூட்டு (FDC) மருந்துகளின் மூலப்பொருட்கள் பெயர் விபரம் (கெஜெட் அறிவிப்பு ) தனியாகவும், அந்த கூட்டு மருந்துகள் சந்தையில் எந்தெந்த பெயரில் (BRAND NAMES) விற்பனைக்கு உள்ளன என்ற விபரம் தனியாகவும் இணைக்கப்பட்டுள்ளன.
தாங்கள் பயன்படுத்தும் மருந்து தடை செய்யப்பட மருந்தா என்பதை பொது மக்கள் இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இந்த இணைப்பில் உள்ள சந்தைபெயர் பட்டியலில் (BRAND NAMES LIST) உங்கள் மருந்து இல்லாவிட்டாலும், கூட்ட மருந்து FDC பட்டியலிலும் சரி பார்த்துக்கொள்ளவும்.
சரிபார்ப்பதில் ஏதும் சிரமம் இருந்தால் - உங்கள் மருத்துவரையோ, மருந்தகத்தையோ அணுகி, உங்கள் மருந்து துண்டை காண்பித்து தெளிவு பெறலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 24, 2018; 10:30 pm]
[#NEPR/2018092401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|