“தொல்லியலும் துறைசார்ந்த நூல்களும் (காயல்பட்டினத்தின் தொன்மையான வரலாற்றுப் பின்னணியில்)” எனும் தலைப்பில், காயல்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் திருமதி சிவசத்தியவள்ளி ஆற்றிய சிறப்புரையின் ஒளிப்பதிவு தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
நீண்ட, பல்வேறுவகைப்பட்ட, கலப்பு வரலாற்றினை தன்னகத்தே கொண்ட ஊராக காயல்பட்டினம் இன்று திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. சமூக நல்லிணக்கத்திற்கு ஓர் அடையாளாமாகவும் அனுதினமும் இந்நகரம் வாழ்ந்து வருகிறது.
இந்த வரலாற்றினை - அறிவியல்பூர்வமாக பாதுகாப்பது - காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு - எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்புடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள, பல்வேறு கோரிக்கைகள், வரலாற்று சான்றுகள் இணைக்கப்பட்டு - அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ சத்தியவள்ளியிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பாக, ஆகஸ்ட் 28 அன்று வழங்கப்பட்டது அனைவரும் அறிவர்.
ஜூன் மாதம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற காயல் புத்தகக் கண்காட்சியில் "தொல்லியலும் துறைசார்ந்த நூல்களும் (காயல்பட்டினத்தின் தொன்மையான வரலாற்றுப் பின்னணியில்)" - காப்பாட்சியர் திருமதி சிவசத்தியவள்ளி ஆற்றிய சிறப்புரை தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதனை காண்பதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது:
https://youtu.be/wcp4g7bkRWI
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 18, 2018; 3:00 pm]
[#NEPR/2018091804]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|