காயல்பட்டினத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்களை நடத்திட, தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர், மாவட்டத்தின் இரு நகராட்சிகளில் ஒரு நகராட்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மிகப்பெரிய ஊர் காயல்பட்டினம். 50,000 பேர் மக்கள் தொகை கொண்ட இவ்வூரில் மின்வாரியத்துறை குறித்து பல்வேறு ஐயப்பாடுகளும், குறைப்பாடுகளும் உள்ளன.
மாதம் ஒருமுறை, மாவட்ட மின்வாரியத்துறை, திருச்செந்தூர் வட்டத்தில் குறைகேள் கூட்டம் நடத்துவதாக அறிகிறோம்.
காயல்பட்டினம் நகரின் பெருவாரியான மக்கள் பெண்கள் என்பதாலும், நெடுதூரம் பயணம் செய்து கலந்துக்கொள்ள வேண்டும் என்பதாலும் - இது போன்ற குறைகேள் கூட்டங்களில் மக்களால் கலந்துக்கொள்ள முடிவதில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் - நீண்ட நாட்களாக தீர்வுகள் இல்லாமல் உள்ளன.
உதாரணமாக –
|| மின்கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது
|| ஏதாவது ஒரு காரணம் கூறி - கூடுதல் தொகை வசூல்
|| குறித்த காலத்தில் மின்பயன்பாடு கணக்கெடுப்பு செய்யப்படுவதில்லை
|| மின்துண்டிப்பு நேரங்களில், எளிதாக அதிகாரிகளை தொடர்புக்கொள்ள முடிவதில்லை
|| விடுமுறை தினங்களில், மின்துண்டிப்பு ஏற்பட்டால் அலுவலகத்தை தொடர்புக்கொள்ள முடிவதில்லை
|| அடிக்கடி உயர் அழுத்த மின்விநியோகம் ஏற்படுவதால், மின்சாதனங்கள் பாதிப்பு
இது போன்று, பல்வேறு புகார்கள் பொது மக்கள் மத்தியில் உள்ளது.
இவைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருப்பதால், பொது மக்களுக்கும், மின்வாரியத்துறைக்கும் புரிதலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை கருத்தில்கொண்டு, தாலுகாவில், மாவட்டத்தில் அதிக மக்கள் வாழும் ஊரான, காயல்பட்டினத்தில் - மக்கள் குறைகேள் கூட்டத்தினை மாதம் ஒரு முறை நடத்திட தங்களை கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் - பொது மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி நீங்கும்; மக்கள் - மின்வாரியத்துறை இடையில் சுமுகமான சூழல் நிலவும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 18, 2018; 8:15 am]
[#NEPR/2018091801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|