காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்த 7 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியில் செல்லவேண்டிய அரசு / தனியார் பேருந்துகள் காயல்பட்டினம் வழியை புறக்கணிப்புது சம்பந்தமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, நடப்பது என்ன? குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்தது.
இருப்பினும் - அவ்வப்போது இப்பிரச்சனை தொடருவது குறித்து - திங்களன்று (செப்டம்பர் 17), நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - சென்னையில் உள்ள போக்குவரத்து துறை ஆணையர் திரு C.சமயமூர்த்தி IAS அவர்களை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். போக்குவரத்து துறை ஆணையரும் உடனடியாக திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலருக்கு (RTO) உடனடியாக உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் விளைவாக, RTO அலுவலக அதிகாரிகள் நேற்று ஆய்வுகள் மேற்கொண்டு, காயல்பட்டினம் வழியை புறக்கணித்து சென்ற 7 அரசு பேருந்துகள் மீது அபராதம் விதித்துள்ளார்கள்.
மேலும் - இது போல, காயல்பட்டினம் வழியை புறக்கணிக்க கூடாது என்றும், தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இது சம்பந்தமான செய்தி - இன்றைய தினகரன் நாளிதழ் நெல்லை பதிப்பில் வெளியாகியுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 20, 2018; 10:00 am]
[#NEPR/2018092002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|