காயல்பட்டினத்திலிருந்து இ பொதுசேவை மையம் இடமாற்றம் செய்யப்படும் திட்டத்தைக் கைவிட மாவட்ட ஆட்சியரைக் கோரி, தொலைதொடர்பு வழியில் முறையிட “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி வளாகத்தில், TACTV என்ற அரசு நிறுவனம் மூலம், ஒரு ஊழியரை கொண்டு, இசேவை மையம், ஜூலை 15, 2015 முதல் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் - 60 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, மின்வாரியத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை பொது மக்கள் பெறமுடியும்.
50,000 மக்கள்தொகை கொண்ட இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் நகராட்சியில், இசேவை மையங்கள் மூலம், பல மக்கள் பல்வேறு சேவைகளை பெற்று வந்தனர். இதனால் - நீண்ட தூரம் சென்று, இடை தரகர்களுக்கு அவசியம் இல்லாமல் பணம் கொடுத்து சான்றிதழ் பெறவேண்டிய சூழல் தவிர்க்கப்பட்டு வந்தது.
நிலைமை இவ்வாறிருக்க, புதிதாக துவக்கப்பட்டுள்ள ஏரல் தாலுகாவிற்கு, காயல்பட்டினம் நகராட்சியில் இயங்கி வரும் இ சேவை மையம் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் - இது சம்பந்தமாக, நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொது நல அமைப்புகளும் கோரிக்கை வைக்க வேண்டி, ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும், ஊர் நல குழுக்களுக்கும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் - மாவட்ட ஆட்சியருக்கு,
-- ஈமெயில் (collrtut@nic.in)
-- FAX (0461-2340606)
-- குறுஞ்செய்தி (SMS)(+91 94441 86000)
-- WHATSAPP தகவல் (+91 94441 86000)
அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 16, 2018; 10:45 am]
[#NEPR/2018091601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|