காயல்பட்டினத்தில் சொத்து வரியை அதிகரிக்க – நகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ரத்து செய்திட ஆணையருக்குப் பரிந்துரைக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி மூலம் வெளியான செப்டம்பர் 10 நாளிதழ் விளம்பரப்படி - நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும்.
30 தினங்களுக்குள், பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யவில்லை என்றால் - புதிய வரி அமலுக்கு வரும். இதன் விளைவாக தற்போது 1000 ரூபாய் சொத்து வரி செலுத்துவோர், 3000 ரூபாய் வரை சொத்து வரி செலுத்தும் சூழல் எழலாம்.
இந்த வரி உயர்வை எதிர்த்து, நடப்பது என்ன? குழுமம் தனது ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 34 (d) படி, எது சட்டமோ, முறையோ - அதனை, மன்றத்திற்கோ, செயல் அலுவலருக்கோ (ஆணையர்) - எழுத்துப்பூர்வமாக பரிசீலனை செய்ய தெரிவிக்க, மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி, காயல்பட்டினம் நகராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை ரத்து செய்து, சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பொது மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் - புதிய தீர்மானம் நிறைவேற்றிட தெரிவிக்கும்படி, மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி IAS அவர்களிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று நேரடியாக மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 1:30 pm]
[#NEPR/2018091703]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |