காயல்பட்டினத்தில் நேற்று (03.10.2018.) 08.45 மணி துவங்கி, 12.45 மணி வரை நகரில் இதமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து சாரல் – தூறல் என மாறி மாறிப் பொழிந்தது. நேற்று பெய்த மழை காரணமாக நகரில் மழைக்கால வானிலையை முழுமையாக உணர முடிந்துள்ளது.
இவ்வாறிருக்க, இன்று நள்ளிரவு முழுக்க நகரில் சிறுமழை தூறியவண்ணம் இருந்தது. இன்று 08.45 மணி நிலவரப்படி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, நகரில் வழமை போல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் மூன்றாவது அதிகபட்சமாக 38.00 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
படங்களுள் உதவி:
அஃப்ரஸ் & முகைதீன் (ததஜ)
[செய்தி திருத்தப்பட்டது @ 08:45 / 05.10.2018.]
|