2018 – 2019 நிதியாண்டில் செய்ய வேண்டிய பணிகளுக்கு, காயல்பட்டினம் MEGA | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பொதுமக்களிடம் நிதி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக இலகுவாக நன்கொடையளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) - 2016 ஆம் ஆண்டு - தமிழக அரசு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்
நடப்பது என்ன? குழுமம் - இதன் சமூக ஊடகப் பிரிவாகும்.
காயல்பட்டினம் நகரின் மருத்துவம், போக்குவரத்து, ஊழல்-லஞ்சம் தடுப்பு, கல்வி, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு துறைகளில் MEGA | நடப்பது என்ன? குழுமம், பணியாற்றிவருகிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவ்வமைப்பின் செயல்பாட்டுக்கான பொருளாதார தேவைகளில் சுமார் நான்கில் ஒரு பங்கு, இவ்வமைப்பின் நிர்வாகிகள் மூலம் வழங்கப்பட்டு, மீதி - சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட, இவ்வமைப்பின் நலன் விரும்பிகள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
2016-2017 நிதியாண்டில், ரூபாய் 53,511 அளவிற்கு பணிகளும், 2017-2018 நிதியாண்டில் ரூபாய் 410,392 அளவிற்கு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
MEGA | நடப்பது என்ன? குழுமம் அமைப்பின் வரவு செலவு கணக்கு, முறையாக தணிக்கை செய்யப்பட்டு, நடப்பாண்டு வரை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
MEGA | நடப்பது என்ன? குழுமத்தின் - 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளுக்கான வரவு - செலவு கணக்கு விபரம், ஏப்ரல் மாதம் - பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
2018-2019 முதல் அரையாண்டு வரவு - செலவு விபரங்கள், அக்டோபர் மாதம் முதல் வாரம் - இறைவன் நாடினால் - வெளியிடப்படும்.
MEGA | நடப்பது என்ன? குழுமத்தின் 2018-2019 நிதியாண்டு பணிகளுக்காக நிதியுதவி வழங்க விரும்புவோர், கீழ்காணும் மூன்று முறைகளில் வழங்கலாம்.
(1) MASS EMPOWERMENT AND GUIDANCE ASSOCIATION என்ற பெயரில் காசோலை (Cheque) / வரைவு காசோலை (Demand Draft) (payable in Kayalpattinam) மூலமாக அலுவலகத்தில் வழங்கலாம்
(2) https://mega.ketto.org/fundraiser/megafundraiser என்ற இணையதள முகவரி மூலம் வழங்கலாம்.
(3) ரொக்கமாக (Cash) நிதி வழங்க விரும்புவோர், அலுவலக நேரங்களில் நிர்வாகிகளை அணுகி, ரசீது பெற்றுக்கொள்ளலாம்
MEGA | நடப்பது என்ன? குழுமத்தின் பணிகளுக்கு நிதி வழங்குவோருக்கு ரசீது வழங்கப்படுகிறது.
எனவே - இணையவழியில் நிதி உதவி வழங்குவோர், தங்கள் முழு பெயரை இணையதளத்தில் பதிவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு பதிவு செய்து விட்டு, இணையதளத்தில் தங்கள் பெயர் தெரிய விரும்பவில்லை எனில், Make my donation anonymous என்ற வழிமுறையினை தேர்வு செய்யலாம்.
=======================================
இணையவழியில் நிதி வழங்க முகவரி:
https://mega.ketto.org/fundraiser/megafundraiser
=======================================
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 7, 2018; 9:30 am]
[#NEPR/2018090701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|