| |
செய்தி எண் (ID #) 20939 | | | வியாழன், செப்டம்பர் 27, 2018 | ஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றம்! “நடப்பது என்ன?” குழும முறையீடு எதிரொலி!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1208 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் ஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றிட, மின் வாரியத்திற்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அக்கம்பம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஆறாம்பள்ளி அருகே மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில், சாய்ந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரை அடுத்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - தூத்துக்குடி மின்வாரியம் கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer), காயல்பட்டினம் மின்வாரியம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் - மின்கம்பத்தை மாற்றிட வேண்டி மனு - கடந்த வாரம் - கொடுக்கப்பட்டது.
அந்த மனுவை ஏற்று, அந்த மின்கம்பத்தை மாற்றும் பணியினை மின்வாரிய அதிகாரிகள் இன்று காலை துவக்கினர். இப்பணிகள் இன்று மாலைக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 4, 2018; 11:15 am]
[#NEPR/2018090401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|