அரசு வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில், பொதுமக்கள் தமது பெயர்கள் உள்ளனவா என இணையதளம் வழியே எளிதில் அறிந்திட வகை செய்யும் பக்கங்களை – பொதுமக்கள் நலன் கருதி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
1-1-2019 தேதியில் 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி - காயல்பட்டினம் நகரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 34,044. இதில் ஆண்கள் - 16,728; பெண்கள் - 17,316.
கடந்தாண்டு அக்டோபர் (2017) மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி - - காயல்பட்டினம் நகரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 33,896. இதில் ஆண்கள் - 16,649; பெண்கள் - 17,247.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என பொது மக்கள் சரிபார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சரி பார்க்க பொது மக்கள் http://elections.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து - 37 பாகங்கள் கொண்ட காயல்பட்டினம் பகுதி வாக்காளர் விபரங்களை, மெகா | நடப்பது என்ன? குழுமம் பதிவிறக்கம் செய்து, பொது மக்கள் எளிதாக தங்கள் பெயரை தேட தோதுவாக, http://kayal.org என்ற மெகா | நடப்பது என்ன? குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
(1) தங்கள் பெயரை சரிபார்க்க விரும்பும் வாக்காளர்கள், http://kayal.org இணையதளத்திற்கு சென்று, காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல் என்ற இணைப்பை சொடுக்கவும்.
(2) அவ்வாறு சொடுக்கிய பின்பு, காயல்பட்டினம் நகரின் அனைத்து பாகங்கள் (வாக்கு சாவடி, தெருக்கள், வார்டுகள்) விபரம் அடங்கிய பக்கத்திற்கு எடுத்து செல்லப்படுவீர்கள்.
(3) அந்த பக்கத்தில், ஒவ்வொரு பாகத்திற்கும் கீழ் வழங்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி - நீங்கள் வசிக்கும் தெருவுக்கான பாகத்தில் உங்கள் பெயரை சரிபார்க்கலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 3, 2018; 4:30 pm]
[#NEPR/2018090302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|