இணையதளம் வழியாக – வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடர்பான வழிகாட்டுத் தகவல்களை உள்ளடக்கி “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜனவரி 1, 2019 தேதியில் 18 வயது பூர்த்தியடைவோர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை -
செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தங்கள் செய்யவோ - சிறப்பு முகாம்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளில் - செப்டம்பர் 9, 16, அக்டோபர் 7, 14 ஆகிய ஞாயிறு தேதிகளில் நடைபெறும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாம்களில் கலந்துக்கொள்ள முடியாதவர்கள், http://www.nvsp.in என்ற இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் - பெயர்களை சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையவழியாகவே ஆவணங்களை இணைக்கும் வசதியும், ஒப்புதல் எண் வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர - புதிய வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என - தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு https://bit.ly/2PD85ZE என்ற இணையதள முகவரி மூலம் பொது மக்கள் பார்வையிடலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் தவறாமல், ஒப்புதல் ரசீது எண்ணை பாதுகாத்து வைக்கவும்.. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்திட, ஒப்புதல் ரசீது எண் அவசியம் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 6, 2018; 6:00 pm]
[#NEPR/2018090604]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|