மருத்துவர் வருவதற்கு முன் இல்லங்களில் நிகழும் மரணங்களுக்கு மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை என்ற தகவலை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஒருவரின் மரணத்தை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை அவரின் உறவினர் - மாநகராட்சி / நகராட்சி / பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் விண்ணப்பித்து பெறவேண்டும்.
மருத்துவமனையில் ஏற்படும் மரணங்களை தொடர்ந்து (Hospital In-patients), மரண சான்றிதழ் (Death Certificate) பெற படிவம் 2 (Death Reporting Form) மற்றும் படிவம் 4 (மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்) ஆகியவற்றை வழங்கி பெறலாம்.
மருத்தவர் முன்னிலையில், வீடுகளில் ஏற்படும் மரணங்களை தொடர்ந்து (Domiciliary Death), மரண சான்றிதழ் (Death Certificate) பெற படிவம் 2 (Death Reporting Form) மற்றும் படிவம் 4A (சிகிச்சை அளித்த மருத்துவர் நிரப்பும் படிவம்) ஆகியவற்றை வழங்கி பெறலாம்.
மருத்தவர் வருவதற்கு முன்பாகவே, வீடுகளில் ஏற்படும் மரணங்களை தொடர்ந்து (Domiciliary Death), மரண சான்றிதழ் (Death Certificate) பெற படிவம் 2 (Death Reporting Form) மட்டும், உள்ளாட்சி அமைப்பின் சுகாதார ஆய்வாளரிடம் கொடுத்தால் போதும்; படிவம் 4A தேவையில்லை.
இந்த விளக்கத்தை, Department of Public Health and Preventive Medicine இயக்குனர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரது கடிதம்:-
படிவம் 2, 4 மற்றும் 4A ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆவணம் உதவி: டாக்டர் D.முஹம்மது கிஸார்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 8, 2018; 10:00 pm]
[#NEPR/2018090802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |