காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒருங்கிணைப்பில், 30.09.2018. அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க இணையவழியிலும் பெயர் பதிவு செய்திட வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவத்துறையின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று இரத்த தானங்கள் ஆகும்.* ஒருவர் செய்யும் ரத்த தானம் மூலம், நான்கு நபர்கள் வரை பயனடைய வாய்ப்பு உள்ளது.
*இந்திய தேசிய இரத்த தான கொள்கைப்படி (NATIONAL BLOOD POLICY)* - மருத்துவத்துறைக்கு தேவையான இரத்தம் - அங்கீகரிக்கப்பட்ட இரத்த வங்கிகள் மூலம் பூர்த்திசெய்யப்படவேண்டும்; மேலும் - *மாற்று கொடையாளிகள் (REPLACEMENT DONORS)* கேட்கப்படும் வழிமுறைகளும், முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
*உலக சுகாதார அமைப்பு (WHO)* உடைய அளவுகோள்படி - *மக்கள் தொகையின் சுமார் 1 சதவீதம் பேர்* இரத்த தானம் செய்தால், மருத்துவத்துறைக்கு தேவைப்படும் இரத்தம், எளிதாக கிடைத்துவிடும்.
இந்த இரு சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு, *நடப்பது என்ன? குழுமம்* - நகரில் தொடர்ந்து இரத்த தான முகாம்களை நடத்தி வருகிறது.
*2017 - 2018* காலகட்டத்தில் நடத்தப்பட்ட *3 இரத்த தானம் முகாம்கள்* மூலம், *250 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.* இது *காயல்பட்டினம் மக்கள் தொகையில் ௦.5 சதவீதம்* ஆகும்.
*2018 - 2019* காலகட்டத்தில், இரத்த தானம் முகாம் - *நடப்பது என்ன?* குழும ஏற்பாட்டில் - ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இதில் *28 பெண்கள் உட்பட சுமார் 122 பேர் இரத்த தானம்* செய்தனர்.
*2018 - 2019* காலகட்டத்தில், இரத்த தான முகாம்கள் மூலம், *மக்கள்தொகையில் ஒரு சதவீதம் கொடையாளர்கள் (500 கொடையாளர்கள்) இலக்கை அடையவேண்டும்* என்ற நோக்கில் *நடப்பது என்ன? குழுமம்* செயலாற்றி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக - _இறைவன் நாடினால்_ - எதிர்வரும் *செப்டம்பர் 30 ஞாயிறு* அன்று *காயல்பட்டினம் அரசு மருத்துவமனை* வளாகத்தில், *திருச்செந்தூர் அரசு மருத்துவமனை* இரத்த வங்கியுடன் இணைந்து - *இரத்த தானம் முகாம்* நடத்திட, *மெகா | நடப்பது என்ன? குழுமம்* திட்டமிட்டுள்ளது.
*இந்த முகாமில் கலந்துக்கொள்ள விரும்புவோர், முற்கூட்டியே தங்கள் பெயரை கீழ்க்காணும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கி - ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*
(1) *A.S.புஹாரி* (+91 96001 83570)
(2) *E.அஹமது சுலைமான்* (+91 99404 97897)
(3) *R.K.ஜஃபருல்லாஹ்* (+91 80564 19629)
நேரில் பெயர் பதிவு செய்ய வாய்ப்பில்லாத கொடையாளர்கள் வசதிக்காக, இணையவழியிலும் பெயர்பதிவு செய்திட வசதி செய்யப்பட்டுள்ளது.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc4WKnLB3W0dYk3cLVEb2lgEr1-KPAX76dZEvva2Wi7fhh-Ug/viewform?usp=send_form
என்ற இணைப்பில் சொடுக்கி, பெயர் பதிவு செய்துகொள்ளலாம்!
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 31, 2018; 6:00 pm]
[#NEPR/2018083101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|