மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், குழுமத்தால் இதுவரை செய்து முடிக்கப்பட்டுள்ள – மருத்துவத் துறை சார்ந்த சேவைப் பணிகளை விளக்கும் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா)* - *அக்டோபர் 2016* இல் - தமிழக அரசின் *சங்கங்கள் சட்டத்தின் கீழ்*, அரசு பதிவு செய்யப்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே - தற்போது மெகா அமைப்பின் *சமூக ஊடகப்பிரிவாக செயலாற்றி வரும் நடப்பது என்ன? குழுமம்* - *மே 2016* இறுதியில் துவக்கப்பட்டது.
துவக்கப்பட்ட இரண்டாண்டு காலகட்டத்தில், காயல்பட்டினம் நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் *மெகா | நடப்பது என்ன? குழுமம்*, அளப்பெரும் பணியாற்றியுள்ளது. _எல்லாப்புகழும் இறைவனுக்கே!_
நகரின் *மருத்துவத்துறை* தேவைகள் விஷயத்தில் *மெகா | நடப்பது என்ன? குழுமம்* ஆற்றியுள்ள பணிகள் குறித்து - *ஆகஸ்ட் 19* அன்று நடந்த *மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)* மற்றும் *அவசரகால மருத்துவ உதவித்திட்டம் அறிவிப்பு (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT)* நிகழ்ச்சிகளின் போது - _மெகா அமைப்பின் செயற்குழு உறுப்பினர்_ *ஹாஜி எம்.என்.அஹமது சாஹிப்* உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் போதும், ஆகஸ்ட் 24 வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு பின்னரும், *மெகா | நடப்பது என்ன?* அமைப்பின் மருத்துவத்துறை பணிகள் குறித்த *கையேடு* விநியோகம் செய்யப்பட்டது. அந்த கையேட்டின் உள்ளடக்கம் வருமாறு:-
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 29, 2018; 1:30 pm]
[#NEPR/2018082902]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |