மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், காயல்பட்டினம் நகரில் சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
*மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA)* ஏற்பாட்டில் *மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)* மற்றும் *அவசரகால மருத்துவ உதவித்திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT)* அறிமுகம் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகியவை - *ஆகஸ்ட் 19 ஞாயிறு* அன்று, *ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)* வளாகத்தில், மறைந்த *டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடையில்*, மாலை 4:45 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் *YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES* விருது வழங்கப்பட்ட 20 மூத்த மருத்துவர்களில், *6 மருத்துவர்கள் சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள் ஆவார்கள்.*
அவர்களுக்கான விருதினை - _சிறப்பு விருந்தினரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் முன்னாள் தலைவருமான_ *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* வழங்கினார்.
*விருது வழங்கப்பட்ட மறைந்த மருத்துவர்கள் மற்றும் அவர்கள் சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்ட உறவினர்கள் பெயர்கள் கீழே:-*
*(1) டாக்டர் G.I.B.பெர்னாண்டோ M.B.B.S., F.C.I.P.* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் மகள் *டாக்டர் சாந்தி*_)
*(2) டாக்டர் M.S.M.முஹம்மது சுலைமான் லெப்பை M.D.,D.V.* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் பேரன் *சுலைமான்*_)
*(3) டாக்டர் S.ஆனந்தன் M.D.(PAED.), D.C.H.* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் மகன் *ராஜா சிரோன்மணி*_)
*(4) டாக்டர் S.E.M.அபூபக்கர் M.B.B.S.* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் மகள் *சித்தி கதீஜா*_)
*(5) டாக்டர் I.அபு முஹம்மது ஷபீக் M.B.B.S., ACU (Sri Lanka)* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் சகோதரி *யாஸ்மீன்*_)
*(6) டாக்டர் A.அப்துல் சுபுஹான் M.B.B.S.* (_அவர்களின் சார்பாக விருதினை பெற்றுக்கொண்டவர் மகன் *டாக்டர் பாஷீல் நவீத்*_)
_தன்னலம் பாராது, இரவு - பகல் என காயல்பட்டினம் மக்களுக்காக, பல ஆண்டுகள் மருத்துவ சேவையாற்றியவர் டாக்டர் ஆனந்தன்._ இந்நிகழ்ச்சி நடந்த மேடைக்கு மறைந்த *டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடை* என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இம்மேடைக்கு வழங்கப்பட்ட பெயரினை குறிப்பிட்டு பேசிய சிறப்பு விருந்தினர் *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்,* *மக்களுக்காக சேவையாற்றிவர்களை எவ்வித பேதமும் இன்றி நினைவுகூறுபவர்கள் காயல்பட்டினம் மக்கள் என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு* என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_விருதுபெற்ற இதர மருத்துவர்கள் விபரம், அவசரகால மருத்துவ உதவித்திட்டம் விபரம் ஆகியவை தனிச்செய்தியாக பின்னர் வெளியிடப்படும்._
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 28, 2018; 9:30 am]
[#NEPR/2018082801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|