11ஆம் வகுப்பு உட்பட சில வகுப்புகளுக்கு, தமிழக அரசு நிகழும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை விதித்துள்ளது.
11ஆம் வகுப்பு இயற்பியல் பாடத்திட்டத்தை (பகுதி 1 & 2) உருவாக்கிய குழுவில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும் – உடுமலைப் பேட்டை அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவருமான பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.நெய்னா முஹம்மது (வயது 39)உம் இடம்பெற்றுள்ளார்.
எம்.எஸ்ஸி., பி.எச்டி., பட்டப்படிப்புகளை முடித்துள்ள இவர், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.பி.சாமு ஷிஹாபுத்தீன் – காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த என்.எம்.ஜமீலத்துல் ஃபவ்ஸிய்யா தம்பதியின் மகன்.
இவருக்கு காதர் மீரா (காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான இ.அஹ்மத் சுலைமான் உடைய மனைவி) என்ற மூத்த சகோதரியும், ஃபைஸல் ரஹ்மான் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.
கே.டீ.எம். தெருவிலுள்ள எஸ்.இ.மரைக்கார் ஆலிம் உடைய மகள்வழிப் பேத்தி எம்.முபீனா என்பவரைத் திருமணம் செய்துள்ள இவருக்கு, என்.எம்.ஹஸீஃபுத்தீன், என்.எம்.ஷஹீம் ஆகிய இரண்டு ஆண் மக்கள் உள்ளனர்.
|