காயல்பட்டினம் தீவுத் தெருவில் – ‘ஹேப்பி சவுண்ட் சர்வீஸ்’ எனும் பெயரில் ஒளி – ஒலி அமைக்கும் நிறுவனத்தைப் பல்லாண்டு காலமாக நடத்தி, நகரின் அனைத்துத் தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற ஹாஜி எஸ்.என்.காஜா முஈனுத்தீன் (எ) ஹேப்பி காஜா இன்று 05.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.
அன்னார்,
மர்ஹூம் சொளுக்கு ஷெய்கு நூருத்தீன் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அந்தமான் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் சொளுக்கு எஸ்.எம்.கபீர் உடைய மருமகனும்,
எஸ்.என்.ஷெய்கு நூஹ் என்பவரது சகோதரரும்,
சொளுக்கு எச்.எம்.ஷெய்கு நூருத்தீன், சொளுக்கு எச்.எம்.முஹம்மத் அலீ, சொளுக்கு எச்.எம்.செய்யித் இப்றாஹீம், சொளுக்கு எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் தந்தையும்,
ஹேப்பி ஏ.ஷம்சுத்தீன், ஊனா மானா எஸ்.எச்.செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் மாமனாரும்,
சொளுக்கு எஸ்.எம்.முஹம்மத் அலீ என்பவரது மச்சானும்,
ஊனா மானா எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் ஹாஜி, மர்ஹூம் கலகலா செ.யி.ஜிஃப்ரீ ஹாஜி, மர்ஹூம் ஊனா மானா எஸ்.செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் சகலையும்,
எம்.எஸ்.அபுல் கலாம் ஆஸாத், எஸ்.என்.ஹாஜா முஈனுத்தீன், எம்.எஸ்.காஜா, ஊனா மானா எஸ்.ஐ.ஷாஹுல் ஹமீத், எம்.ஐ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 20:30 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
S.I.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (உ.ம.)
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 17:50 / 17.09.2018.] |