ஏழை மாணவர் பள்ளிச் சீருடை வினியோகம், இமாம் – முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத் தொகை, ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் உணவுப் பொருட்கள் வழங்கல் உள்ளிட்ட நகர்நலத் திட்டங்களில், பிற காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயலாற்றிட – ஓமன் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வறிக்கை:-
ஓமன் காயல் நல மன்றத்தின் செயற்குழு & பொதுக்குழுக் கூட்டம், 14.09.2018. வெள்ளிக்கிழமையன்று 14.15 மணிக்குத் துவங்கிய, 16.15 மணி வரை – மஸ்கத் குப்ராஹ்விலுள்ள முஹம்மத் அபூபக்கர் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக அமைப்பின் மூத்த உறுப்பினர் Dr. நூர்தீன் அவர்கள் இறைவசனங்களை ஓதி இனிதே துவக்கி வைத்தனர்.
தலைமை உரை
பின்பு வரவேற்புரை மற்றும் தலைமையுரையை நிகழ்வின் தலைமை தாங்கிய KOWA வின் தலைவர் சகோ. அப்துல் காதர் அவர்கள் KOWA உருவாகிய விதம் பற்றி எடுத்துரைத்தார். KOWA வில் அங்கம் வகிக்காத ஓமானில் வசிக்கும் காயலர்களை அமைப்பில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவும், சந்தா செலுத்தாத உறுப்பினர்களை தனியே தொடர்பு கொண்டு சந்தாவை செலுத்த ஊக்குவிப்பதின் மூலம் அமைப்பின் நிதியை அதிகரிக்க முடியும் என்றார்.
தலைவரின் உரையை தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் சுய அறிமுகம் செய்துகொண்டனர். புதிய உறுப்பினர்களின் வரவும், மூத்த அங்கத்தினர்களின் ஆதரவும் கூட்டத்தை வலுப்பெற செய்தன. அல்ஹம்து லில்லாஹ்.
நிதியறிக்கை
அதன் தொடரிச்சியாக சகோ. யாஸீன் மௌலானா நிதி அறிக்கையை சமர்ப்பித்தார். ஷீபா மூலம் வேண்டுகோள் விடப்பட்ட மருத்துவ உதவிக்கு Rs 10,000 பங்களிப்பு செய்தததை பொருளாளர் கூட்டத்தில் நினைவு கூர்ந்தார்.
சிறப்புரை
கூட்டத்தின் முத்தாய்ப்பாக சகோ. மொகுதூம் (சிங்கப்பூரிலுருந்து தற்காலிகமாக பணிமாற்றம் செய்யப்பட்டு மஸ்கத்யில் பணிபுரிகிறார்) நமதூரில் சேவையாற்றி வரும் ஷீபா மற்றும் இக்ரா வின் செயல்பாடுகள், அவ்வமைப்பின் அளப்பரிய பணிகளை தெளிவுற விளக்கினார். மேலும் KWA - சிங்கப்பூர் செயலாற்றும் விதம் மற்றும் அமைப்பின் நிதியை திரட்டிய விதத்தையும் விளக்கினார்.
அமைப்பின் நிதியை அதிகரிக்க KWA - சிங்கப்பூர் கையாண்ட உத்திகளான உண்டியல் முறை (ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் உண்டியல் வழங்குதல்), ஒருநாள் ஊதிய அன்பளிப்பு, ஜகாத் பங்களிப்பு ஆகிய திட்டங்களை ஓமானிலும் அறிமுகப்படுத்தலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தினரின் ஏகோபித்த ஒப்புதலின் படி தலைவர் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
பின்பு உறுப்பினர்களின் கலந்தாலோசனைக்கு பிறகு Dr. நூர்தீன் அவர்களின் துஆவோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
புதிய திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள்
மற்ற காயல் நல அமைப்புகளுடன் இணைந்து பள்ளி சிறார்களுக்கு சீருடை வழங்குதல், இமாம் மற்றும் பிலால்களுக்கான பெருநாள் அன்பளிப்பு, ரமலான் ரேஷன் வழங்குதல் போன்றவைகளில் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இக்ராவின் நிர்வாக செலவினங்களுக்காக கொடுக்கப்படும் தொகையை Rs 30,000 ஆக உயர்த்த ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாண்டில் பல் மருத்துவம் பயில இருக்கும் மாணவியின் கல்வி உதவி தேவைக்காக வருடத்திற்கு Rs 10,000 வீதம் வழங்க ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரித்து ஊர் செல்லும் உறுப்பினர்கள் மூலம் அனுப்பி தேவையுள்ளவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. பயணப்பொதிகள் குறைவாக எடுத்து செல்லும் சகோதர்கள் அறியத் தந்தால் இந்த நன்மையான காரியத்தை செய்ய ஏதுவாக இருக்கும்.
கேரளா மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நமது உறுப்பினர்களிடம் பெறப்பெற்ற பங்களிப்பை ஷீபா மூலமாக MKWA விதம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டத்தை நவம்பர் மாதம் வரும் பொது விடுமுறையில் பொழுதுபோக்கு பூங்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. குழுப்படம் பதிவுசெய்யப்பட்ட பின் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|