மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், காயல்பட்டினம் நகரில் மருத்துவ சேவையாற்றி வரும் 14 மூத்த மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
*மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA)* ஏற்பாட்டில் *மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)* மற்றும் *அவசரகால மருத்துவ உதவித்திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT)* அறிமுகம் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகியவை - *ஆகஸ்ட் 19 ஞாயிறு* அன்று, *ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)* வளாகத்தில், மறைந்த *டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடையில்*, மாலை 4:45 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்ட 20 மூத்த மருத்துவர்களில், *6 மருத்துவர்கள் சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள் ஆவார்கள்.*
*காயல்பட்டினம் மக்களுக்காக - பல்வேறு வகைகளில், பல்லாண்டுகளாக* தொடர்ந்து சேவையாற்றி வரும் 14 மூத்த மருத்துவர்களுக்கு *YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES* விருது, இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
அவர்களுக்கான விருதினை - _சிறப்பு விருந்தினரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் முன்னாள் தலைவருமான_ *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* மற்றும் _மூத்த மருத்துவர்_ *டாக்டர் முஹம்மது லெப்பை* ஆகியோர் வழங்கினர்.
===============================================================
*YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES விருது பெற்ற மூத்த மருத்துவர்கள்*
===============================================================
(1) *டாக்டர் M.A.முஹம்மது தம்பி* AB (USA), M.D., F.A.A.P, D.C.H.
(2) *டாக்டர் M.அபுல்ஹசன்* M.B.B.S.
(3) *டாக்டர் A.முஹம்மது இத்ரீஸ்* M.B.B.S.
(4) *டாக்டர் P.A.M.ஜாஃபர் சாதிக்* M.B.B.S., D.F.M.
(5) *டாக்டர் M.S.L.மஹபூப் சுபுஹானி* M.D., D.M. (Cardio.)
(6) *டாக்டர் M.S.நர்கீஸ் பானு* M.B.B.S.
(7) *டாக்டர் V.பத்மநாபன்* M.D.
(8) *டாக்டர் M.சாமு வஹீதா* M.B.B.S., D.G.O, I.C.M.C.H.
(9) *டாக்டர் S.ராணி டப்ஸ்* M.B.B.S. _(உடல்நலன் குறைவு காரணமாக நிகழ்ச்சியின் போது விருதினை பெறவில்லை)
(10) *டாக்டர் S.M.A.முஹம்மது அபூபக்கர்* F.R.C.S., F.E.B.P.S.
(11) *டாக்டர் V.பாவநாசகுமார்* M.D., D.C.H., P.G.D.H.Sc. (Diab.)
(12) *டாக்டர் D.முஹம்மது கிஸார்* M.B.B.S., D.C.H.
(13) *டாக்டர் P.M.T.முஹைதீன் அப்துல் காதர்* M.B.B.S., D.N.B
(14) *டாக்டர் N.சரஸ்வதி* M.B.B.S.
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 28, 2018; 12:30 pm]
[#NEPR/2018082802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|