கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – கோழிக்கோட்டிலுள்ள மலபார் காயல் நல மன்றமும் (மக்வா), காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து நிவாரண உதவிகள் செய்துள்ளன. இதுகுறித்து, மலபார் காயல் நல மன்றம் சார்பில் சாளை முஹம்மத் உதுமான் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அன்போடு காயல்பட்டினம்.....
கடந்த 100 வருடங்களில் மிகப்பெரிய மழையையும், வெள்ள போக்கத்தையும், மண் சரிவுகளையும், அதன் மூலம் 483 உயிர் சேதமும், சுமார் 4 லட்சம் குடும்பங்களில் உள்ள 15 லட்சம் மனிதர்களை பாதிப்புக்குள்ளாகி, 40 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பொருள் சேதத்தையும் சந்தித்து அவதிக்குள் சிக்கி தவிக்கும் கேரள மக்களில் ஒரு சில குடும்பங்களுக்கு நம் காயல்பட்டிணம் மக்களின் அன்பு கலந்த உதவிக்கரம் மூலம் அவர்களின் அடிப்படை தேவைகள் சிலதை நிறைவேற்றினோம், கேரளவில் உள்ள பிரபலமன தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு நம் காயல் மக்களை வெகுவாக பாராட்டினார்கள். அல்ஹம்து லில்லாஹ்
காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவையுடைய முழு ஒத்துழைப்பு
வீடு வீடாக சென்று பொருள் சேகரித்த நம் காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை அதனை முறையாக உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து ஒப்படைக்க வேண்டும் என்ற முயற்சியை துவங்கி கோழிக்கோடு அதன் சுட்டு வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட அடுத்த நாள் முதலே கலத்தில் இறங்கி உதவிப்பணிகளை செய்துகொண்டிருக்கும் காயலர்களின் அமைப்பான மலபார் காயல் நல மன்றமான எங்கள் அமைப்பை தொடர்பு கொண்டு நம் ஊர் மக்களிடம் இருந்து சேகரித்த தொகை மூலம் அடிப்படை தேவைக்கான பொருட்களை வாங்கி முறைப்படி அந்த மக்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு
கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் திரு U.V. ஜோஸ் IAS அவர்களை சந்தித்து
பாதிக்கபட்ட பகுதியின் கவுன்சிலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனை வில்லேஜ் ஆபீஷர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொண்டு
மாவட்ட ஆட்சியருடைய ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களில் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், வில்லேஜ் ஆபீஸர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் கோழிக்கோடு 3 வில்லேஜ்களில் 197 குடும்பம் ஒரு இடத்தில் வைத்தும், கோழிக்கோடு 50 குடும்பம் மற்றொரு இடத்தில் வைத்தும், வயநாடு 50 ஆதிவாசி குடும்பங்களுக்கு பனமரம் என்ற ஊரில் வைத்தும் நம் பொருட்களை கைமாறினோம் அல்ஹம்து லில்லாஹ்.
கோழிக்கோட்டி 197 குடும்பங்களுக்கு பொருட்கள் கொடுக்கும் கட்சி
வயநாடு, பனமரம் என்ற ஊரில் 50 ஆதிவாசி குடும்பங்களுக்கு
கோழிக்கோடு ஜெயில் ரோட்டில் வைத்து 50 குடும்பங்களுக்கு
பொருட்களை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் உளமார நமக்காக பிரார்த்தனை செய்தது நம்மை கண்கலங்க செய்தது.
இந்த நிகழ்வுகள் அனைத்திலும் காயல்பட்டிணம் முஸ்லீம் ஐக்கிய பேரவை பெரியவர்கள் தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் சிறிதும் ஓய்வின்றி கடந்த 3 தினங்களாக முழுநேர பணியாற்றினார்கள் என்பது குறிப்பிட தக்கது.
எங்களின் கலப்பணியின் போது நாங்கள் கண்ட காட்சிகளும், அந்த மக்களின் மனநிலையும் பாதிப்பின் ஆழத்தை அப்பட்டமாக படம்பிடுத்து காட்டுவாத இருந்தது, மலை சரிவினால் 4 வீடுகள் 15 உயிரை பறித்துக்கொண்டு சில நொடிப்பொழுதில் மண்ணும் கல்லுமாக சிதைந்து விட்ட இடத்தை பார்த்தோம், இரண்டு மாடி வணிக கட்டிடம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததையும் வர்ணிக்க முடியாது
வயநாடு, பனமரம் என்ற ஊரில் பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒரு இஸ்லாமிய சகோதரியின் வீடு
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் சேகரித்த தொகையில் இன்னும் சிறு தொகை நம் கையில் மீதம் உள்ளது. அவைகளை இந்த மக்களுக்கு அடுத்து என்ன தேவை என்பதை முறைப்படி தெரிந்துகொண்டு தகுதியானவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவலாம் என்றுள்ளோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் தேவைகள் அதிகம் இருந்தாலும் உதவிகள் செய்ய முயற்சிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை நம் ஐக்கிய பேரவை பெரியவர்கள் தந்துள்ளார்கள்.
அந்த மக்கள் விரைவில் சகஜநிலை அடைவதற்காக எல்லா தொழுகையிலும் பிரார்த்தனை செய்வோம்.
அந்த மக்களுக்கும், நம் மக்களுக்கும் ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் தருவானாக (ஆமீன்)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|