காயல்பட்டினம் ஆறாம்பள்ளி அருகில் ஆபத்தான நிலையிலிருக்கும் மின் கம்பத்தை விரைந்து மாற்றிட, மின் வாரியத்திற்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஆறாம்பள்ளி வாசல் அருகில் உள்ள மின்கம்பம் - பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் - சாய்ந்த நிலையில் உள்ளது.*
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் மூலம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்கக்கோரி - *நடப்பது என்ன? குழுமம்* சார்பாக - இன்று -
தூத்துக்குடி மாவட்ட *கண்காணிப்பு பொறியாளர் (SUPERINTENDING ENGINEER)*
காயல்பட்டினம் மின்வாரியம் *இளநிலை பொறியாளர் (JE)* மற்றும்
காயல்பட்டினம் நகராட்சி *ஆணையர்*
ஆகியோரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 30, 2018; 12:30 pm]
[#NEPR/2018083001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|