செய்தி: சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதில் பொறுப்புணர்வு வேண்டும்! “நடப்பது என்ன?” குழுமங்கள் மூலம் பொதுநல அறிக்கை வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கலாச்சார சீரழிவுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பகிர்வுகள் posted bymackie noohuthambi (kayalpatnam)[03 October 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46276
கலாச்சார சீரழிவு என்று ஒரு பக்கம் பேசுகிறோம் அந்த சீரழிவுக்கு தவறான தகல்வளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி பெரிதாக்குகிறோம்.
நமதூரில் வாட்ஸுப் மூலம் பல குழுமங்கள் பதிவு செய்யும் தகவல்கள் FORWARDED என்று போட்டு பகிரப்படுகிறது. தவறான செய்திகள் எங்கிருந்தோ எந்த சமூக விரோதியோ போடும் செய்திகளை எல்லாம் பதிவு செய்து மூளை சலவை செய்கிறார்கள். ஒரு செய்தி சரியானதுதானா என்று தெரியாமல் பேசுவதும் எழுதுவதும் இஸ்லாத்தில் பெரிய குற்றமாக கருதப் படுகிறது.
ஒருவரை பற்றி புறம் பேசுவது பெரிய குற்றம் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியபோது சுற்றியிருந்த நபி தோழர்கள் யா ரசூலுல்லாஹ் அந்த குறை அந்த நபரிடம் இருந்தாலுமே அவரைப் பற்றி பேசக் கூடாது என்று கேட்டார்கள். ஆம் அவரிடம் அந்த குறை இருந்தால் அவர் முதுகுக்கு பின்னால் அதை பேசுவதுதான் புறம் பேசுவது என்பதாகும். அந்த குறை அவரிடம் இல்லாவிட்டால் அவரைப் பற்றி பேசுவது அவதூறு அது புறம்பேசுவதை விட கொடிய குற்றம் என்றார்கள் நபிகள் நாயகம் என்பதை உலமாக்கள் சொல்கிறார்கள். இந்த ஹதீதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
எனவே இந்த செய்தியில் சொன்னபடி எல்லோரும் மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே இதை பதிவு செய்துள்ளமைக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross