Re:...நட்புக்கு ஒரு SMS posted bymackie noohuthambi (colombo)[09 October 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46281
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
SMS நூஹு மச்சான் வபாத் செய்தி கேட்டவுடன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. நாங்கள் இளம்பருவத்தில் பள்ளிவாசலில் முஹியித்தீன் பூங்காவில் கடற்கரையில் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.
இரு சக்கர மிதிவண்டியில் DCW யில் அவன் பணியாற்ற சென்ற காலங்கள் பின்னர் படிப்படியாக உழைத்து முன்னேறி சவூதி அரேபியா ARAMCO வில் தடம்பதித்து தன்னை சுற்றியுள்ள குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கு சப்தமில்லாமல் உதவி செய்து எல்லோருடைய துஆக்களை நிரம்ப பெற்றிருந்தவர்.
ஒரு SMS கொடுத்தால் நான் உன்னை வந்து பார்த்திருப்பேனே என்று SMS பற்றி நவீன காலத்தில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் இந்த SMS எங்களுக்கு கூப்பிடும் முன்னே வந்து என்ன வேண்டும் என்று கேட்கும் நண்பனாக இருந்தான்.
சமீபத்தில் ஒரு நாள் என் வீட்டுமுன்னே வந்து நின்றான் நான் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது SMS . ஆச்சரியத்துடன் கேட்டேன் மச்சான் இந்த பக்கம் காத்து வீசுகிறதே யாரை பார்க்க வந்தாய் என்று கேட்டேன். உன்னைத்தான் பார்க்க வந்தேன்.. என்னையா எதற்கு என்றேன் உனக்கு உனக்கு நரம்பு அம்மன் போட்டு கஷ்டப்படுகிறாயாமே பார்க்க வந்தேன்.
எனக்கு பகீரென்றது. இளைப்பு என்று அடிக்கடி நாகர்கோயில் செல்பவன் இப்போது இவ்வளவு தூரம் நடந்து வந்து என்னை பார்க்க வந்திருக்கிறானே. நான் அப்போதுதான் சற்று குணமாகி எனது சகோதரி மகன் வீட்டுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.
மச்சான் மிக்க சந்தோஷம். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ வீட்டுக்கு போ என்றேன். போடா போ நான் பொடி நடையாக போய் விடுவேன் என்று சொன்னான்.
கடநத ஞாயிறன்றுதான் எனக்கு அவன் சென்னை சென்ற தகவல் அறுவை சிகிச்சை நடந்த செய்தி எல்லாம் தெரியவந்தது. அல்லாஹ்விடம் அன்று முதல் இன்று வரை து ஆ செய்து கொண்டிருந்தேன் அவன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் நாட்டம் முந்தி விட்டது.
மர்ஹூம் SMS மச்சான் அவர்களின் நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அவனது குற்றங்களை பொருத்தருள்வானாக அவனது மண்ணறையை வெளிச்சமாகி வைப்பானாக அவனுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.
ஒரு சீதேவியான கணவனை இழந்து வாடும் சித்திமாவுக்கும் அவர்கள் மக்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross