செய்தி: குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ புகாரீ ஆலிம் காலமானார்! இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒரு தலைமுறையின் முடிவு posted bymackie noohuthambi (colombo)[27 October 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46289
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அமைதியான சுபாவமே இயல்பாகக் கொண்ட மரியாதைக்குரிய பாசத்துக்குரிய மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து கவலை அடைந்தேன். ஆனாலும் நிறைவான ஒரு வாழ்வை முழுமையான இறைசிந்தனையுடனும் தக்வாவுடனும் தனது வாழ்வை வாழ்ந்து முடித்து அல்லாஹ்விடம் போய் சேர்ந்திருக்கிறார்கள்
அவர்கள் அருகிலிருந்து தொழுகும்போதெல்லாம் எனக்கு ஒருவிதமான மனக் கஷ்டம் ஏற்படும். இந்த தள்ளாத வயதிலும் அவர்கள் நின்று தொழுகிறார்கள் நான் எவ்வளவு அவர்கள் வயதை விட குறைந்தவன் நாற்காலியில் உட்கார்ந்து தொழுகிறேனே என்று என்னை நானே கடிந்து கொண்டதுண்டு.
அவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலங்களிலும் பின்பு ஊரில் நஹ்வி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த காலத்திலும் பின்பு வயது முதிர்ச்சியால் அதிலிருந்து ஓய்வுபெற்று இருந்த காலங்களிலும் அவர்கள் தங்கள் முதுமையை வெளிக் காட்டிக் கொண்டதில்லை நல்ல உடல்நலத்துடனும் ஞாபக சக்தியுடனும் தனது இறுதி நாள் வரை அவர்கள் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள்.
அவர்களுடன் பழகிய எல்லோருமே அவர்களை ஒரு பொறுமையின் சின்னமாகவே இருந்ததை சொல்வார்கள். பேச்சில் அவர்கள் கடினம் காட்டியதில்லை. எல்லோரும் அன்புடனும் பாசத்துடனும் பழகிய ஒரு மாபெரும் குடும்ப தலைவர் அவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்களின் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. ஒரு தலைமுறையின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்க்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross