Re:...காலச்சக்கரத்துடன் போட்டிபோட்டு ஓடிய பெருந்தகை posted bymackie noohuthambi (colombo)[03 November 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46300
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மாமா அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலை அடைந்தேன்.
அவர்கள் திருச்சி நகரிலேயே தன் வாழ்நாளில் நீண்ட காலங்களை கழித்தவர்கள். திருச்சியில் LKS JEWELLERS நகை கடையில் நல்லதொரு ஆளுமையுடன் கடைக்கு வருபவர்களுடன் அன்பொழுக பேசி மக்கள் ஆதரவை பெற்று கடைக்கும் தனக்கும் புகழ் சேர்த்துக் கொண்டார்கள்.
தனியானதொரு நகை கடையை நிறுவி தொழில் செய்தபோதும் அவர்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் அலை மோதினார்கள். பைக்கில் அந்த நகரில் அவர்கள் சுற்றாத இடம் இல்லை. எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். காலச்சக்கரத்தின் சுழற்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்தவர்கள்..
கபாடி பள்ளியில் நோன்பில் தராவீஹ் தொழுகைக்கு அவர்கள் ஆயுள்கால இமாம். அவர்கள் திருச்சியை விட்டு வந்த பிறகுதான் அந்த இடம் வேறு ஒருவரால் நிரப்பப் பட்டது என்றாலும் ஹாபிசா மாமா அவர்கள் விட்டுச்சென்ற இடம் ஒரு வெற்றிடமாக இருப்பது போலவே அந்த முஹல்லா ஜமாத்தார்கள் இன்றுவரை உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சிறப்பான குடும்ப தலைவரை இழந்து நிற்கும் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது நெஞ்சம் நிறைந்த மைத்துனர் சலாஹுதீன் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் எனது சபூரை கூறிக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross