செய்தி: (பாகம் 1) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும்? மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மக்களுக்குச் சொன்ன அறிவுரை! “மெகா | நடப்பது என்ன?” தகவலறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒத்துழையாமை இயக்கம் posted bymackie noohuthambi (colombo)[05 November 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46303
நீதிபதி அவர்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் கூட்டு சேர்ந்து கொண்டு அல்லது தனி தனியாக அடிக்கும் கொள்ளைகளை எதிர்க்க கட்சி தலைவர்கள் அன்றாடம் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கம் வரிகொடாமை இயக்கம் நடத்தியபோது அன்றைய மக்களுக்கு இருந்த ஆர்வம் கவலை இன்று மக்களிடையே இல்லை.
ஒருவர் பொது வெளியிலே தவறு செய்த போது அதை இன்னொரு நேர்மையானவர் கண்டு மனம் வெந்து போனாராம். அவர் சிறுநீர் கழித்தபோது சிறுநீர் இரத்தமாக சென்றதாம். அடுத்தநாளும் இதே போன்று நடப்பதை பார்த்து விட்டு மனம் வெதும்பி போனாராம்., அப்போது சிறுநீர் மஞ்சளாக போனதாம். மூன்றாம் நாளும் இதே தவறை பார்த்து விட்டு இது சர்வ சாதாரணம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது இப்போது அவர் சிறுநீர் கழித்தபோது வழக்கமான நிறத்தில் சிறுநீர் கழிந்ததாம்.
நமது ஊழல் அரசுகளுக்கும் நமது மனங்களுக்கு இது பொருந்தி போகிறது. ஓட்டுக்கு நோட்டு நோட்டுக்கு ஓட்டு என்ற சூத்திரம் வெகுவாக பரவி அது திருமங்கலம் சூத்திரம் திருநெல்வேலி சூத்திரம் ஆர்கே நகர் சூத்திரம் என்று ஜேஜே என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒத்துழையாமை இயக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தின் ஜோக் என்று இதை எடுத்துக் கொள்வதா அல்லது நீதிபதிகள் பேசுவதையும் அவர்கள் செயல்பாடுகளையும் பார்த்து நீதி தேவன் மயக்கம் என்று எடுத்துக் கொள்வதா...ஒன்றுமே புரியவில்லை...
அல்லாஹ்வின் பள்ளியிலே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு செல்கிறார்கள். கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருக்கும் கடவுள் சிலையையே திருத்தி சென்று பல கோடிக்கு விற்றுவிட்டு அமைதியாக இருக்கிறார்கள்..இறைபக்தி இறை அச்சம் எல்லாம் அருகிவிட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்கள் கூடாரம் ஆகி விடக் கூடாது என்பதற்காக..
பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது என்பதற்காக...
கலைஞரின் வைர வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross