செய்தி: இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார்! இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வைகறையில் வந்த ஒரு அதிர்ச்சி தகவல். posted bymackie noohuthambi (colombo)[09 November 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46306
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
சகோதரர் இக்பால் வபாத் செய்தி சுபுஹ் தொழுகைக்கு செல்லும்போது கிடைத்தபோது எல்லோரையும் போல் நானும் சற்று அதிர்ந்துதான் போனேன். அல்லாஹ்வின் அஜல் வரும்போது அது ஒரு நொடிப்பொழுதும் பிற்படுத்தவும் படாது முற்படுத்தவும்படாது என்ற திருமறை வசனத்தை ஓதியபோது ஸபூர் செய்து கொண்டேன்.
புகாரி & Co வும் பல்லாக் கம்பெனியும் எங்கள் தந்தைக்கு இரண்டு கண்கள் போன்றவை. நான் சிறுவனாக இருக்கும்போது என் தந்தை அங்கு அழைத்து செல்வார்கள். ஜிப்ரி காக்காவுடன் அதிக நேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருப்பதற்கு காரணம் அன்று இருந்த உபசரிப்பும் அன்பும் இன்றும் அங்கே அந்த சந்ததிகளிடம் இருப்பதை நான் கண்கூடாக கண்டு வருகிறேன்.
இக்பால் அவர்களை சந்தித்த கால நேரம் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியின் வெளிப்பாடு. அப்போது புதிதாக இலங்கை இந்தியாவுக்கிடையே கப்பல் ஓட ஆரம்பித்தது. அது தூத்துக்குடிக்கு செல்லும் பயணம். எனக்கும் ஒரு ஆசை. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு பயணம். அன்று சாமான்களை கொண்டு சென்று ஒரு இடத்தில இறக்கி அங்கிருந்து அவை பாஸாகி செல்லவேண்டும். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத இடத்தில் அங்கும் இங்கும் திரும்பி பார்த்தபோது இக்பால் அவர்கள் ஓடி வந்து எனக்கு ஆக வேண்டியவைகளை கச்சிதமாக செய்து தந்தார்கள்.
இப்படி தேவையான நேரத்தில் அழைக்காமல் வந்து உதவி செய்யக் கூடிய சுபாவம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு பெரிய நியூமத். நமக்கு ஒரு ரஹ்மத்.
அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அவர்கள் சகோதர்கள் எனது பாசத்துக்குரிய ரபீக், நஜ்முதீன் முஸம்மில் சகோதர்களும் இக்பால் அவர்களுக்கு சற்றும் குறையாமல் என்னிடம் அன்பாக இருப்பவர்கள். அவர்கள் எல்லோருக்கும் இக்பால் அவர்கள் மனைவி மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் சபூரையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
புனித வெள்ளிக் கிழமை ஸெய்யிதுல் ஐயாம் என்ற இன்ற இந்த சிறப்பான நாளில் மறைந்துள்ள இக்பால் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்களின் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
உங்கள் துயரில் பங்கு கொள்ளும்
மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross