செய்தி: ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உதவி வரைத்தன்று உதவி posted bymackie noohuthambi (colombo)[10 December 2018] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46324
உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து என்று வள்ளுவம் சொல்கிறது.
நாம் பாடுபட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை பார்க்கும்போதும் இன்பம்
என்று ஒரு கவிஞன் பாடுவான்.
நபிகள் நாயகம் அவர்கள் எல்லாவற்றையும் விட ஒரு அருமையான செய்தியை சொல்கிறார்கள். ஈத்தம்பழத்தின் ஒரு சுளையை தர்மம் கொடுத்தாவது உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உதவி செய்பவரை விட அந்த உதவி யாருக்கு எந்த நேரத்தில் தேவை என்று எண்ணி தர்மம் செய்வது மிக உத்தமமான விஷயம். அந்த வகையில் காயல்பட்டினம் ஐக்கிய பேரவையின் இந்த சேவை மகத்தானது அள்ளிக் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ் அள்ளிக் கொடுப்பான். கிள்ளிக் கொடுப்பவர்களுக்கு அல்லாஹ்வும் கிளிக் கொடுப்பான் என்று ஓர் ஆலிம் பெருந்தகை என்னிடம் சொன்னார்கள்.
கஜ புயல் வந்து மக்கள் திண்டாடியபோது நமதூர் மக்கள் உலகெங்கிலும் இருந்து தங்கள் நிதிகளை அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.அல்லாஹ் அவரால் எல்லோருக்கும் அள்ளிக் கொடுப்பானாக.
இங்கே சகோதரர் நவாஸ் அவர்கள் வந்திருந்தபோது அவர்களிடம் ஒரு விஷயத்தை சொன்னேன். இந்த துயரமான நேரத்தில் காயல்பட்டினம் மக்கள் இவ்வளவு தொகை அள்ளி தந்தார்கள் என்று இருக்க வேண்டுமே தவிர காயல் நகர திமுக காயல்நகர் அதிமுக காயல்நகர முஸ்லீம் லீக் காயல்நகர் தவ்ஹீத் ஜமாத்து காயல்நகர் SDPI என்று இப்படி பிரிந்து கொடுப்பது அல்லாஹ்விடத்தில் நமக்கு ஒரு முகஸ்துதியை ஏற்படுத்தும் இது கட்சியை வளர்க்கும் ஒரு உபாயமாக ஆகிவிடக் கூடாது என்று நான் பயப் படுகிறேன் என்று எனது உள்ளக்கிடக்கையை அவர்களிடம் வெளியிட்டேன்.
இந்த செய்தியை பார்த்ததும் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
சீதக்காதி வள்ளலையே வாரி வழங்கிய வள்ளல் மண் இது என்று காயல்பட்டினம் மக்களை பாராட்டி ஒரு கவிஞர் பாடினார். அது மிகவும் சத்தியமானது ,அல்ஹம்து லில்லாஹ்.
இதற்காக முயற்சித்தவர்கள் களத்தில் நின்று ஆக்கப் பனி செய்தவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ் றஹ்மது செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross