அண்மையில் ‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அமைப்பின் சார்பில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, ஐக்கியப் பேரவை சார்பில் உதவிகள் வேண்டி - நகர பொதுமக்களுக்கும், அனைத்து ஜமாஅத்துகள் & பொதுநல அமைப்புகளுக்கும், உலக காயல் நல மன்றங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், காயல் நல மன்றங்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும், தன்னார்வலர்களும் தமது உதவித்தொகைகளையும், பொருட்களையும் ஐக்கியப் பேரவை அலுவலகத்திற்கும், அதன் செயலர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் இல்லத்திற்கும் நேரில் சென்று வழங்கினர்.
வயது வேறுபாடின்றி, நகரின் தன்னார்வலர்கள் துணையுடன் நகர் முழுக்க வாகனங்களில் தெருத்தெருவாகச் சென்று – பொதுமக்களிடம் உதவித்தொகைகளும், பொருட்களும் பெறப்பட்டன.
இவ்வாறாகப் பெறப்பட்ட – சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகை & பொருட்கள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் லாரி போன்ற வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, நகரின் தன்னார்வ இளைஞர்கள் துணையுடன் – ஐக்கியப் பேரவை நிர்வாகிகளால் – ‘கஜா’ புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள – அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்குப் பகிரப்பட்டது.
படங்களில் உதவி & தகவல்:
A.J.சொளுக்கு, M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் & ‘ஸ்கட்’ அபூ |