காயல்பட்டினம் சேதுராஜா தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றி நிறுவிட ஆவன செய்யுமாறு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா, அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள சேதுராஜா தெருவில் அமைந்துள்ள மின்விளக்கு கம்பம் - ஆபத்தான முறையில், தெருவிற்கு நடுவில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பெருத்த சிரமமாக மட்டும் இல்லாமல், விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
எனவே - இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றி, சாலைக்கு ஓரமாக அமைத்திட ஆவனம் செய்யும்படி கோரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி மாவட்ட மின்வாரியத்துறை கண்காணிப்பு பொறியாளர், காயல்பட்டினம் மின்வாரியம் இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு - மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 10, 2018; 9:30 am]
[#NEPR/2018121001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|