தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துக் கோட்டங்களிலும், கோட்ட வாரியாக மாதம் ஒருமுறை மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பை உள்ளடக்கி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பின்வருமாறு தகவலறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோட்டத்திலும், கோட்ட வாரியாக மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வகையில் இம்மாதம் 27.12.2018 அன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இக்கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே தூத்துக்குடி வருவாய்க்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொது மக்கள், தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ஒவ்வோரு மாதத்திலும், வட்ட வாரியாக சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் ஒவ்வோரு குறுவட்டத்திலும், குறுவட்ட வாரியாக வட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர் (ச.பா.தி.) ஆகியோர்கள் தலைமையிலும் - அந்தந்த வட்டத்திற்குட்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையிலும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எனவே - பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 13, 2018; 11:30 am]
[#NEPR/2018121302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|