கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி உடைய (தொடர்பு எண்: +91 95669 31848) தந்தை - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த டீ.வி.செய்யித் அஹ்மத் நெய்னா இன்று 08:45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் எஸ்.ஏ.தவ்ஹீத் அவர்களின் மூத்த மகனும்,
மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் டீ.வி.முஹம்மத் அப்துல் காதிர், டீ.வி.ஜாஃபர் சாதிக், டீ.வி.முஹம்மத் ராஷித் ஆகியோரின் சகோதரரும்,
எஸ்.ஏ.தவ்ஹீத், கத்தர் காயல் நல மன்ற துணைத் தலைவர் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் எம்.கே.எம்.முஹம்மத் ஹசன், மர்ஹூம் எம்.கே.எம்.செய்யித் ஐதுரூஸ், எம்.கே.எம்.முஹம்மத் இக்பால், எம்.கே.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.எம்.எச்.ஜாஃபர் சாதிக், எம்.எஸ்.மொகுதூம் முஹம்மத், என்.ஐ.இம்தியாஸ் அஹ்மத் ஆகியோரின் மச்சானும்,
எஸ்.எம்.எச்.முஹ்யித்தீன் தம்பி, எஸ்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் மாமனாரும்,
மர்ஹூம் என்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் அவூது பிள்ளை, என்.எச்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் மருமகனும்,
குளம் ஏ.பி.அஹ்மத் லெப்பை என்பவரது சகலையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்குப் பின் இரட்டை குளத்துப் பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |